Friday, April 8, 2011

விண்டோஸ் அப்டேட் சிக்கல்கள்



எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தும் பல வாசகர்கள், தங்கள் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்துவிட்டதாகவும், விண்டோஸ் எக்ஸ்பியை மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் எப்படி அதனை அப்டேட் செய்வது என்றும் கேட்டுள்ளனர். விண்டோஸ் வழக்கமாக தானாக அப்டேட் செய்து கொள்கிறது. இத்துடன் நாம் அப்டேட் பைல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின் ஒரு நாளில் பயன்படுத்த வசதி உள்ளதா? இல்லை எனில் எப்படி முழுமையாக அப்டேட் செய்வது எனக் கேட்டுள்ளனர்.
சில மாதங்களாகவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடிக்கடி ரீபார்மட் செய்வது நமக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தீர்வினைப் பார்க்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மைக் காலத்தில் வெளியிட்ட விண்டோஸ் துணை சாதன வசதிகள், சரி செய்யப்பட்ட முக்கிய பிரச்னைகள்  (Hot fixes)பாதுகாப்பு வழிகள் (Security Fixes),  மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் (விண்டோஸ் மீடியா பிளேயர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவை) ஆகியவற்றை அளிக்கும் சேவை ஆகும். இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தீர்வுகள் நம்மை, அவ்வப்போது தாக்கும் புதிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறனை அளிக்கின்றன.

பொதுவாக, அப்டேட்ஸ் எனப்படும் மேம்படுத்தப்படும் செயல்பாட்டினை, இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் அப்டேட் சர்வீஸ் (Windows Updates)  என்பதன் மூலம்,  மைக்ரோசாப்ட் தானாகவே மேற்கொள்கிறது. ஆனால், இந்த மேம்படுத்தப்படுத்தலுக்கான கோப்புகளை, கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, பின்னர் நாம் விரும்பும் நாளில், இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள நாம் விரும்பலாம். அல்லது இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவற்றைப் பதியலாம். இத்தகைய சூழ்நிலைகள் பல நேரங்களில் ஏற்படுகின்றன.
குறிப்பாக, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்த பின்னர், இந்த பைல்களை இயக்கி, விண்டோஸ் சிஸ்டத்தினை முழுமையாக நவீனமாக அமைத்துக் கொள்ளலாம்.  இந்த பைல்களை சிடியில் பதிந்து வைத்துக் கொள்வதற்கான  வழிகளை இங்கு காண்போம்.
1. முதலில் விண்டோஸ் அப்டேட் டவுண்லோடர்(Security Fixes), என்னும் பைலை http://wud.jcarle.com/ ProgramFiles.aspx  து என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும்.
2. அடுத்து http://wud.jcarle. com/ UpdateLists.aspx என்ற முகவரி யில் உள்ள தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதற்கான அப்டேட் பட்டியலை டவுண்லோட் செய்திடவும்.  உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சரியான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இங்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் அப்டேட்டிங் சரியாக நடைபெறாது.
3. அப்டேட்ஸ் பட்டியலை இறக்கி, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள் உங்கள் நோக்கத்திற்கான வேலையை மேற்கொள்ள தயாராகிவிட்டீர்கள். அடுத்து விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் பைலை இயக்கவும். இதற்கான விண்டோ கிடைத்தவுடன் ஓகே கிளிக் செய்து தொடரவும்.
4. இனி அப்டேட்ஸ் பட்டியல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது   “Compressed UL file installed என்றபடி ஒரு மெசேஜ் விண்டோ கிடைக்கும். ஓகே கிளிக் செய்து தொடரவும். இந்த நேரத்தில் சிலருக்கு  “Warning, .NET framework component is not installed”    என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.  .NET framework  என்ற இந்த வசதி கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்பதால் இந்த செய்தி தரப்படுகிறது. எனவே தயங்காமல், இடையே இதனையும் இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.microsoft.com /downloads/details.a spx?FamilyID=0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f5
5.  UL பைல் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் விண்டோவிற்கு மீண்டும் வருவீர்கள். அங்கு விண்டோஸ் அப்டேட்ஸ் செய்வதற்கான சில அடிப்படை வசதிகள் பட்டியலிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
6. உங்களுக்கு எந்த வசதிகள் எல்லாம் அப்டேட் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவை எல்லாவற்றையும் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தையும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் இதுவரை வந்தமைக்கான சர்வீஸ் பேக், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பல மோசமான பிழைகளைச் சரி செய்திட்ட புரோகிராம்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், டாட் நெட் பிரேம்வொர்க் போன்றவையும் இருக்கும்.
7. இனி, Change” பட்டனில் கிளிக் செய்து,இந்த பைல்கள் அனைத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு போல்டரில் சேமித்து வைக்கவும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள ட்ரைவில் இவற்றை வைக்க வேண்டாம். வேறு ஒரு ட்ரைவில், போல்டரில் வைத்திடவும்.
8. இப்போது எல்லாம் தயாராக உள்ளது. இனி Change”  பட்டனில் கிளிக் செய்திடவும். அனைத்து அப்டேட் பைல்களும், நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் பதியப்படும். பைல்களின் அளவு சற்று அதிகமாகவே இருப்பதால், சற்று கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.  அப்ளிகேஷன் விண்டோ வினையோ, இணைய இணைப்பையோ இந்த வேளையில் மூடக் கூடாது.
9. டவுண்லோட் முடிந்தவுடன், குறிப்பிட்ட போல்டரைத் திறந்து பார்த்தால், அப்டேட் செய்வதற்கான அனைத்து பைல்களும் இருப்பதனைப் பார்க்கலாம்.
10. இதில் உள்ளவற்றை, கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட, குறிப்பிட்ட அப்ளிகேஷன் பைலை டபுள் கிளிக் செய்தால் போதும். கம்ப்யூட்டரில் அவை அப்டேட் செய்யப்படும்.
11. இந்த பைல்களை ஒரு டிவிடியில் பதிந்து எடுத்துச் சென்று, வேறு எந்த கம்ப்யூட்டரிலும் அப்டேட்டிங் பணியை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment