மூளையில் நினைவுகள் நரம்பு செல்களுக்கிடையேயான தொடர்புகளாகப் பதிவாகின்றன. நரம்பு செல் தொடர்புகளை சினாப்ஸ் என்பார்கள்.
இந்த சினாப்சுகளின் வலு அதிகமானால் நினைவு சாகும் வரை மறையாது. வலுவற்ற சினாப்சுகளின் நினைவுகள் சீக்கிரமே மறைந்துவிடுகின்றன.
ஒரு சம்பவம் நீண்ட நாள் நினைவில் இருக்கிறதென்றால் அது அதிர்ச்சி தரும் சம்பவமாக இருக்க வேண்டும் அல்லது உள்ளத்து உணர்வுகளை எழுப்புவதாக இருக்க வேண்டும்.
அதனால்தான் நாம் விபத்துகளையும், மகிழ்ச்சியடன் கழித்த குழந்தைப் பருவ நினைவுகளையும் மறப்பதில்லை. இதற்குக் காரணம் உணர்வுப் பூர்வமான சம்பவங்களின் போது மூளையில் நரம்புத் தொடர்புகளை வலுப்படுத்தும் விதமாக நார் எப்பிநெஃப்ரின் என்ற கெமிக்கல் அதிகமாக உற்பத்தியாகிறது.
இதை அசோக் ஹக்டே(பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகம்) என்பவர் ஆராய்ந்து தெரிவிக்கிறார்.
|
No comments:
Post a Comment