ரூ.1.20 கோடி விலையில் மனதை மயக்கும் வடிவமைப்பு கொண்ட மஸராட்டி சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபியட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இத்தாலியை சேர்ந்த மஸராட்டி நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமாகும். இத்தாலியிலுள்ள மொடெனா என்ற இடத்தில் தொழிற்சாலை அமைத்து, சூப்பர் கார்களை உற்பத்தி செய்து வரும் மஸராட்டி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தனது சூப்பர் கார்களை அறிமுகப்படுத்தப் போவதாக மஸராட்டி கடந்த மாதம் அறிவித்தது. இதையடுத்து, மஸராட்டி சூப்பர் கார்கள் மற்றும் அதன் விலை விபரங்களை தெரிந்துகொள்வதற்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் ஆவல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ரூ.1.20 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் முதல் சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது மஸராட்டி. மேலும், மஸராட்டி கார்களுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக ஸ்ரேயான்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மஸராட்டியின் ஏசியா பசிபிக் மேலாண் இயக்குனர் சைமன் நிக்கோலை கூறியதாவது:
"கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சூப்பர் கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, இந்திய சந்தையில் நுழைய முடிவு செய்தோம். மஸராட்டியின் அனைத்து மாடல்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
இந்திய சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியும், பெருமையும் தரும் தருணமாக உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு முதல் டீலரையும், அடுத்த ஆண்டு டெல்லியில் இரண்டாவது டீலரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

|
No comments:
Post a Comment