Friday, April 8, 2011

கணினிச் செய்திகள்.



01.உலகின் அதிக விலைகூடிய இணையதளப் பெயர்.
நியூயோர் நகரில் செக்ஸ டொற் கொம் என்ற இணையதளப் பெயரின் பாவனை உரித்து 13 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. செக்ஸ் டொற் கொம் இணையதளத்தின் உரித்தாளியான எஸ்கொம் நிறுவனம் பெரும் கடனாளியாகி நீதிமன்றத்தில்  முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியோடு எஸ்கொம் நிறுவனச் சொத்துக்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. செக்ஸ் டொற் கொம் என்ற இணையதளப் பெயரை குளோவர் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 13 மில்லியன் டாலருக்குக் கொள்வனவு செய்துள்ளது. இதைப் போன்ற பெரும் விலைக்குப் பிறிதொரு இணையதளப் பெயர் இதுவரை விற்பனையாகவில்லை.
02. பேஸ்புக் பாவனையாளர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் விடுக்கும் எச்சரிக்கை.
இலண்டன் அக்ரோபர் 28:
ஐக்கிய இராச்சியத்தில் 26 மில்லியன் பேஸ்புக் பாவிப்போரும் 18 மில்லியன் ருவிற்றர்ஸ் ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள். இவர்களில் பலர் தமது விடுப்புக்கால உல்லாசப் பயணம் பற்றிய தகவலை மேற்கூறிய இணையதளங்களில் வெளிப்படுத்துகின்றனர்.
இந்தத் தகவலைத் தமது திருட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் கும்பல்கள் பூட்டிக் காலியாகிக் கிடக்கும் வீடுகளுக்குள்  புகுந்து கொள்ளை அடிக்கின்றனர். இப்படியான சம்பவங்களுக்குத் தம்மால் இழப்பீடு  வழங்க முடியாதென்று பிரித்தானியாவின் காப்புறுதி நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
வீடுகளை திருட்டுச் சம்பவங்களுக்கு எதிராகக் காப்பீடு செய்வோர் தமது உல்லாசப் பயணத்திட்டங்களை வெளிப்படுத்துவதால் காப்புறுதி நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன. எதிர்காலத்தில் தமது வீடு காலி என்று விளம்பரம் செய்வோருக்கு இழப்பீடு வழங்க முடியாதென்று காப்புறுதிச் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
03. கைபேசிச் செய்திப்பரப்பல் மூலம் மொழிப் போராட்டம்.
குவின்காய்,திபெத்து அக்ரோபர் 28:
சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் திபெத்தில் புதிய பாடத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது குவின்காய் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்கள் சீனமொழிக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சீன ஆட்சியாளர்கள் புகுத்திய புதிய பாடத்திட்டத்தில் கல்வி மொழியாகச் சீனமொழி வைக்கப்பட்டுள்ளது. திபெத்து மொழி ஒரு பாடமாக மாத்திரம் இருக்கும். தனிச் சீனமொழிப் பாடத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.
தமது எதிர்ப்புக்கு வலுச்சேர்ப்பதற்காக கைபேசி மூலம் அனுப்பும் குறுஞ்செய்திகளை திபெத்து மாணவர்கள் ஆட்சேர்ப்பிற்கும் பேரணி முன்னெடுப்பிற்கும் பயன்படுத்துகிறார்கள்.
04.விக்கிபேடியா மீது தொடுக்கப்படும் கண்டனக் கணைகள்
இன்ரர்நெற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விக்கிபேடியா தகவல் களஞ்சியத்திற்கு இரு முக்கிய சிறப்புக்கள் உண்டு. அதில் தகவல் பெற விரும்புவோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அது இலவச சேவை இதற்காக விக்கிபேடியா நிறுவனம் நிதி நன்கொடையை வசதியுள்ளோரிடம் கேட்டுப் பெறுகிறது.
அடுத்த சிறப்பு என்னவெனில் யாரும் எந்தவித தகவலையும்  விக்கிபேடியாவில் தங்கு தடையின்றிப் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். விக்கிபேடியாவை அணுகுவோர் சுட்டிக்காட்டும் பட்சத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
யாரும் தகவல் பதிவேற்றம் செய்யலாம் என்ற அனுமதி முறைகேடுகளுக்கும் அவதூறு பரப்பலுக்கும் வழிவிட்டுள்ளது. அதிபர் கெனடி அவருடைய சகோதரர் றொபேட் ஆகியோரைக் கொன்ற உண்மையான குற்றவாளி றொபேட் கெனடியின் அந்தரங்கச் செயலாளர் தான் என்ற தகவலை யாரோ விக்கிபேடியாவில் பதிவு செய்துவிட்டார்கள்.

இது முற்றிலும் பொய்யான ஆதாரமற்ற தகவல் என்றாலும் அது பலகாலம் திருத்தம் செய்யப்படாமல் ஏதோ காரணத்திற்காக விக்கிபேடியாவில் தங்கிவிட்டது. மேற்கூறிய பொய்யான தகவலைப் பிற இணையங்கள் பிரதியாக்கம் செய்துள்ளன. கெனடி சகோதரர்களைக் கொன்றவர்கள் பட்டியலில் ஒரு அப்பாவியின் பெயர் சேர்ந்து விட்டது.
தழிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் அதன் தலைமைத்துவத்திற்கு எதிராகவும் பல அவதூறுக் கட்டுரைகள் விக்கிபேடியாவில் பதிவாகியுள்ளன. விழிப்பாக இருந்த தமிழ் அபிமானிகள் எடுத்த கடும் முயற்சியால் அவை விக்கிபேடியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான அவதூறுகள் விக்கிபேடியாவில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன விக்கிபேடியா களங்கம் கற்பிக்கும் பிரசார மேடையாக இருப்பதை மறுக்க முடியாது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவை அனுமதிக்கப்படுகின்றன.
இந்து மதத்திற்கு எதிராகவும் பொய்த்தகவல்கள் விக்கிபேடியாவில் பதிவாகியுள்ளன. கத்தோலிக்க மதத்தினருக்குரிய பாப்பரசரைப் போன்றவர் இந்து மதத்தினரிடம் இருப்பதாக ஒரு தகவல் சென்ற வருடம் வெளிவந்தது. இந்து மதத்தில் பாப்பரசர் போன்ற பெரும் மதத் தலைவர் கிடையாது என்று சுட்டிக்காட்டியபோது விக்கிபேடியா நிர்வாகம் திருத்தம் செய்ய மறுத்துவிட்டது.
விக்கிபேடியா தனது நம்பகத்தை இழந்து வருகிறது மேற்குலகிலும் ஆசியாவிலும்  பல்கலைக்கழகங்களும் கல்லுரிகளும் விக்கிபோடியாத் தகவல்களை விடைத்தாள்களில் பயன்படுத்த வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
ஸ்கொட்லாந்து பெற்றார்-ஆசிரியர் சங்கம் மாணவர்களின் தேர்வுத் தோல்விக்கு விக்கிபேடியாவில் வெளிவரும் தவறான தகவல்கள்தான் காரணம் என்று கண்டித்துள்ளது.
05. புதுடில்லியில் மக்கள் தொகையிலும் பார்க்கக் கைபேசிகள் எண்ணிக்கை மிக அதிகம்.
மக்கள் தொகைக் கணிப்புக்களின்படி இந்திய தலைநகர் புதுடில்லியின் மக்கள் தொகை 1 கோடி 83 இலட்சம். இந்த நகரின் மக்கள் பாவனையிலுள்ள கைபேசிகள் எண்ணிக்கை 2 கோடி 83 இலட்சம்.
அதாவது மக்கள் தொகையிலும் பார்க்கக் கைபேசி எண்ணிக்கை ஒரு இலட்சம் கூடுதலானது. இந்த வருடம் முடியுமுன் புதுடில்லிக் கைபேசி எண்ணிக்கை 3 கோடியாகும் என்று இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு புதுடில்லி வாசியும் இரு கைபேசி வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
06. கணினி மூலம் வடிவமைப்பு:
டிசைன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் செயற்பாடு எல்லா வகைத் தயாரிப்புக்களிலும் முக்கிய இடம் வகிக்கிறது. டிசைன் என்பது  வடிவமைப்பு. திரவங்கள் அடைக்கும் போத்தில்கள் போன்ற கொள்கலன்கள் தொடக்கம் பொதி செய்யும் அனைத்து வடிவமைப்புக்களும் டிசைனில் அடங்குகின்றன. வாகனங்கள்இவிமானங்கள் ஆண் பெண் இரு பாலாரும் அணியும் ஆடைகள் கணினியில் இயங்கும் வடிவமைப்புச் சாதனங்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
இது தொடர்பில் சி ஏ டி என்ற மூன்றெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சி ஏ டி என்றால் கொம்பியூட்டர் உதவியோடு செய்யப்பட்ட வடிவமைப்பு என்று பொருள். மாற்றங்களின் பெறுபேறாக வடிவமைப்பு உருவாகிறது என்று சொல்வது தவறு வடிவமைப்பு மூலம் மாற்றங்கள் ஏற்படுகின்றன  என்று சொல்வதுதான் மிகப்பொருத்தம்.இது கணினி நிபுணர்களின் தீர்ப்பு.
நுகர்ச்சிப் பொருள் வர்தகத்தில் அது மொத்த வியாபாரமானாலும் சில்லறை வர்த்தகமானாலும் பொதியின் கவர்ச்சிதான் மிக முக்கியம். விற்பனையின் பாதி இரகசியம் பொதியில் அதாவது பக்கெற்றில் தங்கியிருப்பதாகச் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதியை கணினி வடிவமைக்கின்றது.
ஊடகத்தை அச்சு ஊடகம். எலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்துகிறார்கள் இரண்டுமே கணினியில் தங்கியுள்ளது புத்தகம் ஒரு விற்பனைப்பொருள் அதன் விற்பனையைப் பெருக்குவதில் வடிவமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது திரைப்படங்கள் டிஜிற்றல் கமராக்களால் எடுக்கப்பட்டு டிஜிற்றல் முறையில் எடிற் செய்யப்படுகின்றன.
ஒரு புதிய மோட்டார் காரை வடிவமைத்துப் பரிசோதனை செய்தபின் சந்தையில் சேர்ப்பதற்குப் பல வருடங்கள் எடுக்கின்றன செலவும் பல மில்லியன் டாலரை விழுங்குகின்றன புதிய மொடல் என்று வருடந்தோறும் வெளிவரும் மோட்டார் கார்கள் சில முகப்பூச்சு மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட வியாபார உண்மை.
07. கணினித்  திருட்டைத் தடுக்க இயலாமல் திணறும் உலகம்:
வங்கிக் கணக்குகள் கணினியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் கனது பெயரிலுள்ள வைப்புக் கணக்கில் பணத்தைப் போடுவதற்கும், எடுப்பதற்கும் பாஸ்வேர்ட் எனப்படும் அவருக்கு மட்டும் தெரிந்த இரகசியச் சொல் அல்லது எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
புhஸ்வேர்ட் மிகவும் பாதுகாப்பாகப் பேணப்பட வேண்டிய சாதனம். அப்படிப் பாதுகாப்பாக வைக்கப்பட்டாலும் அதைத் திருடும் திறமை பெற்ற சூரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வருடம் (2010) இதுவரை நடந்த பாஸ்வேட் திருட்டுக்களில் சொய்ஸ் என்ற சொவ்ற்வெயரை எழுதி 100 மில்லியன் டாலருக்கும் கூடுதலான திருட்டு பெரும் கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது. இந்த திருட்டைச் செய்யும் நபர் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. ஐந்து கண்டங்களிலும் வாழும் கணினி நிபுணர்கள் திருடனைத் தேடி அலைகிறார்கள். அதாவது கணினிகள் மூலமாகத்தான் திருடனைத் தேடுகிறார்கள் திருடன் ருஷ்யாவில் வாழலாம் என்று சந்தேகிக்கிறார்கள். அவ்வளவுதான்.
2007ம் ஆண்டு தொடக்கம் சொய்ஸ் மென்பொருள் மூலம் பலகோடி டாலர்களை இவன் திருடி வருகிறான். தனக்குத் தேவைக்கு மிஞ்சிய பணம் கிடைத்தவுடன் திருட்டுக்களை நிறுத்துவதாக அவன் பகிரங்க அறிவித்தல் விடும் வழக்கம் கொண்டவன்.
இப்படி இந்ந அநாமதேயப் பேர்வழி 2007,     2008ம் ஆண்டுகளில் அறிவித்தல் விடுத்திருக்கின்றான். ஆனால் இந்த வருடம் மீண்டும் தொடங்கி விட்டான். கணினி உலகின் மிகப் பரபரப்பான செய்தி இந்தத் திருட்டுத்தான் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment