17 மாதமே ஆன இரட்டை குழந்தைகள், அவர்களுக்கு மட்டுமே புரிந்த மழலை மொழியில், தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ‘டடடட’ டடட’ காட்சிகளை எதேர்ச்சையாக படம் பிடித்து யூடியூப்பில் அப்டேட் செய்துவிட்டார் அவர்களுடைய தாயார்.
ஏப்ரல் 1ம் திகதி முதல், இன்றுவரை சுமார் 14 மில்லியன் தடவைக்கு மேல் இணையத்தில் பார்க்கப்பட்டு, இந்த வாரத்தின் சென்ஷேஷனல் ஹிட்ஸ் வீடியோவாக மாறிவிட்டது இது.
காரணம் மழலை மொழி என்பதால், அவர்கள் எதை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்? என ஆளாளுக்கு மூளையை கசக்கத்தொடங்கியது தான். பிரபல செய்தி தளங்களும் இந்த முயற்சியை கையில் எடுத்தன.
தமது நிறுவனங்கள் பற்றியும், தமது நிகழ்ச்சிகள் பற்றியும் அவர்கள் பேசிக்கொள்வது போல காண்பித்துக்கொண்டார்கள். அவ்வளவு ஏன்.. லிபிய அதிபர் கடாபியின் பேச்சுமொழி கூட இவ்வீடியோ காட்சிக்கு மாற்றுமொழியாக இடம்பிடித்துவிட்டது. 2011 இன் சிறந்த வேற்றுமொழிக்கான காட்சித்திரைப்படமாக ஆஸ்கார் இதை தெரிவு செய்ய வேண்டுமெனவும் நகைச்சுவை செய்கிறார்கள்
இதோ குழந்தைகள் தங்களது சொந்த மழலை மொழியும் பேசிக்கொள்ளும் வீடியோ தொகுப்பும், மற்றவர்கள் மாற்றுமொழிகளை வைத்து உருவாக்கிய வீடியோ தொகுப்புக்களும்!
உங்களுக்கு ஏதும் புரிந்தால் சொல்லுங்கள்.. அது என்ன ‘டடடட டடடடட’??
ஒவ்வொருவரும் இப்படி மழலை மொழியை நாசம் செய்யத்தொடங்கியதால், உடனடியாக தன் பங்கிற்கு மருத்துவர் வரை அணுகியது சி.என்.என் இணையத்தளம்!
இவ்வீடியோ தொகுப்பை நிச்சயம் பாருங்கள்!
|
No comments:
Post a Comment