Friday, April 8, 2011

அழுது 'காரியம்' சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகள்-ஆண்களே!

அழுது அழுதே காரியம் சாதிப்பவர்கள் பெண்கள் என்பது காலம் காலமாக உள்ள ஒன்று. ஆனால் இது தவறு என்கிறது அறிவியல் ஆய்வு. உண்மையில் பெண்களை விட ஆண்கள்தான் அழுது காரியம் சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகளாக இருக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு.

இதை ஒரு சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

அதன்படி அவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ஆண் எலிகளையும், பெண் எலிகளையும் ஈடுபடுத்தினர். ஆண் எலிகளின் கண்ணில் அடிக்கடி கண்ணீர் வருவது வழக்கம். இது ஏன் என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். ஆண் எலிகள் ஏன் அடிக்கடி அழுகின்றன என்பதைக் கண்டறிய நடந்த அந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான உண்மைகள் கிடைத்தன.



ஆண் எலிகளின் கண்ணீரை எடுத்து ஆய்வு செய்தபோது அதில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய எஸ்பிபி1 என்கிற பெரோமோன் (pheromone)இருப்பதை கண்டறிந்தனர். இந்த செக்ஸ் பெரோமோன் அடங்கிய கண்ணீத் திவலைகள் எலிகளைச் சுற்றிலும் விழும்போது அதிலிருந்து நறுமணம் கிளம்புகிறது.

இந்த வாசத்தை மோப்பம் பிடிக்கும் பெண் எலிகள், அந்த இடத்தை நோக்கி வருகின்றன. வந்த எலிகள், ஆண் எலிகளைச் சுற்றிலும் விழுந்து கிடக்கும் கண்ணீர்த் துளியில் கலந்துள்ள அந்த பெரோமோனை (இது ஆவியாகக் கூடிய தன்மை இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது) நுகர்ந்து சுவைக்கவும் செய்கின்றன.

அப்படி செய்யும்போது அந்த பெண் எலிகளின் மூளையில் உள்ள செக்ஸ் உணர்வுக்கான பகுதி தூண்டப்பட்டு அந்த பெண் எலி செக்ஸ் மூடுக்கு வந்து விடுகிறது. அப்படி வரும்போது அந்த எலியின் காதுகளும், வாலும் விரைப்பாக தூக்கிக் கொண்டு நிற்கின்றன.

இதைப் பார்க்கும் ஆண் எலிகள், வலையில் விழுந்த பெண் எலிகளுடன் உல்லாசத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றன.

ஆண் எலிகளின் கண்ணீருக்குப் பின்னால் இப்படி ஒரு ரொமான்ஸ் கதை அடங்கியுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை அடுத்து மனிதர்களிடமும் நடத்திப் பார்க்கவுள்ளனராம்.

ஆண்களின் கண்ணீரிலும் இதேபோல செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய செக்ஸ் பெரோமோன் இருப்பது உறுதியானால், இங்கே பெண்களின் கண்ணீரை ஒரு கையால் துடைத்து விட்டு, அப்பெண்களின் கையால் தங்களது கண்ணீரைத் துடைக்க வைக்கும் ஆண்கள் பெருகும் சாத்தியம் உள்ளது.

No comments:

Post a Comment