Friday, April 8, 2011

சொனி பிளேஸ்டேசன் போன்-சொனியின் நவீன தயாரிப்பு



பிரபல இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான சொனி பிளேஸ்டேசன் போன் (Playstation Phone) எனும் நவீன கையடக்கத் தொலைபேசியினை தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பி.எஸ்.பி (PSP- PlayStation Portable) என்பது சொனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கையடக்க கேமிங் ( Gaming ) சாதனமாகும்.
இதைப் போன்ற கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதும் கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான கையடக்கத் தொலைபேசியினை சொனி இரகசியமாக தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன் நவீன கையடக்கத்தொலைபேசியின் பண்பையும் இது கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சொனி மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களின் ‘ சொனிஎரிக்சன்’ தயாரிப்பாகவே இது வெளியாகவுள்ளது.
இது கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு இயங்கவுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
1) 1GHz Qualcomm MSM8655 processor
2) 512MB RAM,
3) 1GB ROM,
4) 3.7 to 4.1 inches tough screen
மேலும் கேம் விளையாடுவதற்கு ஏதுவான கீபேட்களும் இணைக்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
இவ்வுபகரணமானது 2011 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment