பாஸ்ட் குறித்து மதுரையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எழுதி போட்டு பெற்ற பதில்களை நேற்று வெளியிட்டோம்.
அந்த சகோதரர் பாஸ்போர்ட் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பல கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அவருக்கு பதில் வந்துள்ளது. அவரது கேள்வியையும் பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.
1.புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு கண்டிபாக குடும்ப அட்டை எனப்படும்(Ration card)வைத்திருக்க வேண்டுமா ?
2.குடும்ப அட்டை அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. மீறி பயன்படுத்தினால் அந்த குடும்ப அட்டை ரத்து செய்யப்படுத்துவதோடு சம்பத்தபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளது அவ்வாறு இருப்பின் எவ்வாறு பாஸ்போர்ட் அலுவலகத்தில் குடும்ப அட்டையே(Ration card) இருப்பிட சான்றாக ஏற்கபடுகிறது ?
3.குடும்ப அட்டை பயன்படுத்தலாம் என அரசு ஆணை (Copy of the Government order) இருப்பின் அவிற்றீன் அரசு ஆணையீன் நகலை பார்வையிட விரும்பிக்கிறேன் ?
4.வாக்காளர் அடையாள அட்டை(Voter Identity card) அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மற்றும் அனைத்திற்கும் பயன்படுத்தலாம் என்று உள்ளது ஆனால் குடும்பஅட்டையில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை எதன் அடிப்படையில் குடும்ப அட்டை இருப்பிட சான்றாக ஏற்கிறார்கள் ?
5.புதிய விண்ணப்பத்தை தபாலில் சமர்ப்பிக்க முடியுமா தபாலில் விண்ணப்பத்தை சமர்பிப்பத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?
6.காவல்துறை விசாரனை எனப்படும்(Police Verification) யார் யாருக்கு மற்றும் எந்த வயதினற்கு பொருந்தும் ?
7.குழந்தைகளுக்கு காவல்துறை விசாரணை உள்ளதா ?
8.காவல்துறை விசாரணை எதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தால் செய்யப்படுகிறது?
9.எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை காவல்துறை விசாரணை தேவைப்படுகிறது?
10.குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் (Personnel Particulars) எனப்படும் சொந்த தகவல் இன்னைக்கப்பட வேண்டுமா?
11.ஒருவருக்கு பாஸ்போர்ட் பத்து ஆண்டுகள் வரை செல்லுபடி அரசாங்கத்தால் வழங்கபடுகிறது. அவருக்கு மூன்று ஆண்டுகளில் பாஸ்போர்ட் பக்கங்கள் முடிந்து (Additional booklet) எனப்படும் மாற்று பாஸ்போர்ட் தேவைப்படும்போது அவரை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தபடுவரா?
12.புதிய விண்ணப்பங்கள் எத்தனை நாளில் பரிசீலிக்க படுகிறது?
13.காவல்துறை விசாரணைக்கு ஏதாவது கட்டணம் பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதா ?
14.காவல்துறை அதிகாரி விசாரணைக்கு வரும்பொழுது அவரிடம் ஏதாவது ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து ஏதாவது உத்தரவு உள்ளதா ?
15.காவல்துறை அதிகாரி விசாரணை செய்யும் போது போட்டோ, குடும்பஅட்டை,மற்றும் பிறப்பு சான்றிதழ் நகலை அவர் கேட்கிறார் என்றால் அவரிடம் சமர்பிக்க வேண்டுமா அல்லது பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏதாவது உத்தரவு உள்ளதா ?
16.பாஸ்போர்ட் சம்பத்தப்பட்ட விசாரணைபோது காவல்துறையிடம் ஏன்ன ஆவணம் சமர்பிக்க வேண்டும்.அவ்வாறு இருப்பின் அரசு ஆணை (Government order) அவிற்றீன் அரசு ஆணையீன் நகலை பார்வையிட விரும்பிக்கிறேன் ?
17.ஒரு குடிமகன் தெரியாமலோ, தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக ஏன் வசூல்செய்யப்படுகிறது?
18.உதாரணமாக ஒருவர் பாஸ்போர்ட் (DAMAGE) சேதம் ஆகிவிட்டால் அவருக்கு அரசாங்கத்தால் (RS.2500)நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் அவற்றை விட அதிகமாக வசூல் செய்யப்படவேண்டும் என அரசு ஆனை (Government Order) இறுப்பின் அவற்றீன் நகலை (XEROX COPY) பார்வையிட விரும்பிகிறேன்
19.ஒருவர் பாஸ்போர்ட் தொலைந்த பின்பு காவல்துறையிடம் புகார்மனு (Compliant receipt)மற்றும்காணாமல்போன சர்டிபிகேட் (Missing certificate) வாங்கி கொடுத்த பிறகு எத்தனை நாளீல் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் ?
20.காணாமல்போன பாஸ்போர்ட் பெருவதறகு என்ன ஆவனம் கொடுக்க வேன்டும் ?
21.காணாமல்போன பாஸ்போர்ட் பெருவதறகு காவல்துறை விசாரணை அவசியமா ?
22.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தினம்தோறும் எத்தனை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் ?
23.பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிகாரி யாரும் ஏன் அரசு அடையாள அட்டை(IDENTY CARD) அணிவது கிடையாது ஏன்?
24.அரசு அடையாள அட்டை (Identify card) அணியகூடாது என்று ஏதாவது உங்களுக்கு சட்டம் உள்ளதா ?
25.ஒரு அரசு அதிகாரி அடையாள அட்டை(IDENTY CARD) அணியா விட்டால் தவறு செய்யும் பட்சத்தில் ஏவ்வாறு அடையாளம் காண முடியும் ?
26.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏன் பொது மக்களிடம் அதிகாரிகள் சரியான முறையில் பதில்தர மறுக்கிறார்கள் ?
27.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் எத்தனை அதிகாரிகள் ( How Many Staff) பணியில் உள்ளளர்கள் அவர்கள் பதவிகள் & பணிகள் (Nnature of Work & Duties) விபரம்கள் ?
28.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏன் டெலிபோன் எடுப்பதறகு ஆள் இல்லை என்பதுதற்கு கரானம்?(No telephone operator)
29.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN முதல் பெறப்பட்ட மொத்த வின்னப்பங்கள் விபரம் ?
30.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN முதல் காவல்துறை விசாரணைக்கு அணுப்பபட்ட வின்னப்பங்கள் விபரம் ?
31. 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN பாஸ்போர்ட் வழங்க வின்னப்பங்கள் விபரம் ?
இதற்கு அவருக்கு வந்த பதில்
தகவல் அனுப்பியவர் – முஹம்மது இஸ்மாயில்
|
No comments:
Post a Comment