சிறிய அளவு மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சிறிய மன அழுத்தத்தால் 70 சதவீதம் பேர் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாகக் கூடிய நிலை உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வினை ஸ்வீடனை சேர்ந்த பிரிஸ்டல் மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட் பல்கலைகழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வு அறிக்கை நோய் தடுப்பு மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவு மன அழுத்தம், உளவியல் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் 5 ஆண்டுகளில் செயல்பட முடியாத தன்மையையும் ஏற்படுத்துகிறது என அவர்களது ஆய்வு குறிப்பிடுகிறது.
ஸ்வீடன் ஆய்வில் மன நெருக்கடிக்கு உடல் ரீதியாக பிரச்சனைகளும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவினர் 18 வயது முதல் 64 வயது வரை 17 ஆயிரம் பேரை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரியவந்தது.
இதில் 203 பேர் மன நலம் சார்ந்த பிரச்சனைக்களுக்கும், இதர நபர்கள் உடல் ரீதியான சுகவீனத்திற்கும் பலன்களை பெற்றனர். பலன் பெறுவோரில் நான்கில் ஒரு பங்கினர் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற உடல் ரீதியான குறைபாடுகளை கொண்டிருந்தனர்.
|
No comments:
Post a Comment