நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டிருந்த தற்காப்புக் கலை நிகழ்ச்சியொன்றில் தனது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கீனன் ஸ்டோன் என்ற இளைஞர் எதிர்பாராத தர்மசங்கடத்துக்கு ஆளானார். கலை நிகழ்ச்சி அரங்கில் தனது திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்த போது அவரின் காற்சட்டை திடீரென கழன்று விழுந்து விட்டது.
எனினும், தனது திறமையைக் வெளிக்கொணரும் முயற்சியில் இருந்து பின்வாங்காமல் தன்னை சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து சிறப்பான முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரதும் பாரட்டைப் பெற்றார்.
வர்ஜீனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் சீன தற்காப்புக் கலையான வுஷூவில் கறுப்புப்
பட்டிப் பெறுவதற்கான தகுதி காண்நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கீனன் ஸ்டோன், அடுத்த ஆண்டு காற்சட்டையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு மீண்டும் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment