ராணுவ வீரர் சங்கரநாராயணன், டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31); ராணுவ வீரர். இவர், ஐ.டி.ஐ., எலக்ட்ரிக்கல் படித்துள்ளார். டூவீலர், கார் சாவியை பயன்படுத்தாமல், "செக்யூரிட்டி கோடு' மட்டும் பயன்படுத்தும் "வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பைக் ஸ்டார்ட் செய்வதற்கான ஒயரை, சாவி இடத்திற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, செக்யூரிட் கோடு பாக்சிற்குள் கொண்டு வரப்படுகிறது. "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட் பாக்சில்' டிஸ்பிளேயுடன் கூடிய ஒன்பது இலக்கம் கொண்ட கீபோர்டு இருக்கும். இதில் ஸ்டார்ட் செய்வதற்கான எண்களை அழுத்திய பின், "கிக்' செய்தால் டூவீலர் "ஸ்டார்ட்' ஆகும். கீபோர்டிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை அழுத்தினால் போதும், இன்ஜின் ஓட்டம் நின்று விடும்.
"செக்யூரிட்டி கோடு' மறந்து விட்டால், எமர்ஜென்சிக்காக செய்யப்பட்ட மற்றொரு ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்தினால் ஸ்டார்ட்டாகி விடும். மீண்டும் புதிய கோடு நம்பரை தேர்வு செய்து, வழக்கம் போல் ஸ்டார்ட் செய்யலாம். இதே போல், கார்களுக்கும் சாவி போடாமல் இந்த "வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' பயன்படுத்தலாம். திருடர்கள் இந்த செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டர் ஒயரின் இணைப்பை துண்டித்தாலும் இயந்திரத்தோடு ஒயர் இணைத்திருப்பதால் கார், டூவீலர் இன்ஜினை ஸ்டார்ட் செய்யவே முடியாது. அதே போல், டூவீலர்களில் முன் பக்க சக்கரமும் இதனுடன் சேர்த்து பூட்டப்பட்டு விடும். இதனால் திருட்டு சாவி போட்டு கார், டூவீலர்களை திருட வாய்ப்பே இல்லை. "வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' பொருத்த டூவீலருக்கு 1,200 ரூபாய், காருக்கு 5,000 ரூபாய் ஆகிறது. இதுவரை யாரும் வாகனங்களுக்கான "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டரை' கண்டு பிடிக்கவில்லை. இதற்காக கிண்டியிலுள்ள இந்திய அறிவு சார் சொத்துரிமை அலுவலகத்தில், இதற்கான பேட்டன்ட் உரிமையை எனக்கு கடந்த வாரம் வழங்கினர், என்றார்.

|
No comments:
Post a Comment