Tuesday, July 12, 2011

கையசைத்தால் பேசலாம் வருகிறது புதிய தொழில் நுட்பம்

எதிர் காலத்தில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியுமாம். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர் வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னும் சில ஆண்டுகளில் கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால் இலகுவில் கண்டறிந்து விட முடியும் எனக் கூறப்படுகிறது. கோடைகாலங்களில் இளஞ்சிறார்களும் பனிக்காலங்களில் வயது முதிர்ந்தோரும் முறிவுகளைச் சந்திப்பது மேலைத்தேய நாடுகளில் சாதாரணமாக நடைபெறுவதாகும்.


இவ்வாறான வேளைகளில் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசர அவசரமாக ஓட வேண்டிய தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் போகலாம். நாம் எங்கள் குடும்ப வைத்தியரிடமே சென்று முறிவைப் பரிசோதித்து பத்துப் போட்டுக் கொள்ளலாம்.
இப் புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐ போனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப் படி குறுகிய தூரத்திருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.

இப்புதிய கண்டு பிடிப்பானது எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது குறுந்தூர அலைகளை உள்வாங்குவதால் பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்தவும் செம்மையாக்கவும் உதவுகின்றது. இது தவிர இக்குறுந்தூரஅலைவாங்கியின் தொழிநுட்பம் எக்ஸ்ரே, அல்ரா ஒலிசோதனை மற்றும் எம் ஆர் சோதனைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள்இ விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப் புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் படுகிறது.

ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.

இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள்இ மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ”கருணையால் ” புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.

இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.

No comments:

Post a Comment