Saturday, March 26, 2011

ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?


TRANS FAT என்றால் என்ன? இது நம்மை எப்படி பாதிக்கிறது?

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போது TRANS FAT என்ற கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இவை L.D.L.,என்னும் கெட்ட கொழுப்பை, குறிப்பாக "ஸ்மால் டென்ஸ் எல்.டி.எல்.' என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.எந்த தரமான எண்ணெயையும் மீண்டும், மீண்டும் நாம் சமையலுக்கு
பயன்படுத்தினாலும், இவ்வகை கொடூரமான டிரான்ஸ்பேட் என்னும் கொழுப்புகள் உருவாகின்றன.இவற்றை பெரும்பாலும், ஓட்டல்கள், விடுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் வீட்டிலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. அதற்கு என் டாக்டர் இரு மாத்திரைகளை தந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் எனது உடலில் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மாத்திரையை எடுக்கும் போது மிகவும் சோர்வாக உள்ளது. எனவே, அதை நிறுத்தி விட்டேன். தற்போது ரத்த அழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?

ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்காவிட்டால் பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும். ரத்தக்கொதிப்பு இருப்பதால் ஒருவருக்கு அறிகுறி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.உங்களுக்கு தந்துள்ள மாத்திரையால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் டாக்டரிடம் சென்று கலந்து பேசி, அதை மாற்றி அமைத்தால் பாதிப்பை நீக்கலாம். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவு இல்லாத மாத்திரைகள் உள்ளன.

No comments:

Post a Comment