Sunday, April 24, 2011

கணினி சிஸ்ட கவசம்



  • > துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில் 
  • > பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும் 
  • > கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை 
  • > பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை 
  • > உன்னிப்புடன் நெஞ்சே குறி! 
  • > காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க 
  • > அடியேன் சிஸ்டம்  அழகுவேல் காக்க 
  • > வின்டோசைக் காக்க வேலன் வருக 
  • > கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க 
  • > இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க 
  • > பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க 
  • > செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க 
  • > வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க 
  • > முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க 
  • > வைரஸ் வாராமல் வைரவேல் காக்க 
  • > சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க 
  • > எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க 
  • > பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க 
  • > ஈமெயில் தன்னை இணையவேல் காக்க 
  • > மவுசை மகேசன் மைந்தன் காக்க 
  • > எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க 
  • > அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க 
  • > எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க 
  • > அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க 
  • > அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள் 
  • > நில்லாதோட நீ எனக்கருள்வாய் 
  • > ஹாங் ப்ராப்ளமும் 
  • > ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும் 
  • > என் பெயர் சொல்லவும் 
  • > இடி விழுந்தோடிட 
  • > ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை 
  • > அலறவே வைத்திடும் 
  • > ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும் 
  • > வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும் 
  • > அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட 
  • > பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க 
  • > பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ 
  • > மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை 
  • > மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க 
  • > மூவாகல் மூர்க்கம் செய்யும் 
  • > மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக 
  • > நகர நீ எனக்கருள்வாய் 
  • > கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என 
  • > டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை 
  • > போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க 
  • > கன்னா பின்னாவென்று வரும் 
  • > கமான்ட் இன்டட் ரெப்டுகளை 
  • > கந்தன் கைவேல் காக்க 
  • > அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும் 
  • > பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும் 
  • > மானிட்டர் பக்கம் வந்து விடாமல் 
  • > என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட 
  • > ரேமும், ரோமும் மெமரியோடிருக்க 
  • > அனைத்து ஃபோர்டர்ஸீம் 
  • > ஆயுளோடு விளங்க 
  • > டௌன்லோடு, அப்லோடு டக்கராய் 
  • > விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன் 
  • > சிறப்புடன் வாழ்க. 
  • > அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர் 
  • > அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய் 
  • > ஷட்டௌன் தடங்கல் 
  • > சட்டென்று நீங்க 
  • > ஷண்முகன் நீயும் சடுதியில் வருக 
  • > கணினி சிஸ்டம் கவசம் இதனை 
  • > சிந்தை கலங்காது கேட்பவர்கள், 
  • > படிப்பவர்கள் எந்நாளும் பாடாய் 
  • > படுத்தாத கணினியுடன் வேலை செய்வார். 
  • > வாழ்க கணினி. வளர்க மவுஸ். 
  • > சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க 

No comments:

Post a Comment