சஸ்பென்சாக வைத்திருக்கும் சினிமா பற்றிய தகவல்கள், போட்டோக்களை நடிகை திவ்யா டுவிட்டரில் வெளியிடுவதால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர் மீது கோபத்தில் உள்ளனர். ‘கட்டாரி வீர சூர சுந்தராங்கி’ என்ற படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.
இதில் உபேந்திரா ஹீரோ. திவ்யா ஹீரோயின். தற்போதைய நவீன காலம் மற்றும் தேவலோக காலம் ஆகிய இரண்டையும் இணைத்து இப்படம் உருவாகிறது. இதனால் படத்தின் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, காஸ்டியூம் போன்றவற்றை வெளியிடாமல் இயக்குனர் ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் ஹீரோயின் திவ்யா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். படத்தில் அணிந்து நடிக்கும் புதுவித காஸ்டியூம், பின்னணி அரங்கு ஆகியவற்றின் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சஸ்பென்சாக வைத்திருக்கும் தகவல்களை திவ்யா அம்பலப்படுத்தி வருவதால் இயக்குனரும் தயாரிப்பாளரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். படம் சம்பந்தமாக எந்த தகவல், போட்டோவையும் வெளியிட கூடாது என்று திவ்யாவுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
|
No comments:
Post a Comment