Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது.
இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். Rundll32.exe கோப்பு நம் கணினியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணினி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அது தான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணினியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் click செய்திடவும் என ஒரு link தரும். இதில் click செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.
|
No comments:
Post a Comment