குமரி யில் தற்போது 18,620பேர் அகண்ட அலைவரிசை மூலம் இணையதள இணை ப்பு பெற்றுள்ளனர். எனி னும் சில பகுதிகளில் இந்த சேவை கிடைக்காத நிலை உள்ளது. மேலும் 500 பேர் வரை இணையதள இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 4ம்தலைமுறை அதிவேக கம்பியில்லா அதி வேக இணையதள சேவை குமரியில் நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்சிக்கு பிஎஸ்என்எல் பொது மேலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைப்பொது மேலாளர் துரைராஜ் வரவேற்றார். மற்றொரு துணைப்பொது மேலாளர் குசலகுமாரி முன்னிலை வகித்தார். ஹெலன்டேவிட்சன் எம்.பி தொடங்கி வைத்து பேசும் போது, தனியார் நிறுவனங்களைவிட இணை யதள பதிவிறக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு பிஎஸ்என்எல்லில் கட்டணம் குறைவு. தரைவழி இணை ப்பில் இணைப்பு கிடைக்காத பகுதிகளுக்கும் கூட கம்பி இல்லா இணையதளம் மூலம் பயன்பெற முடியும் என்றார்.
ஒரு வைமேக்ஸ் கோபுரம் அமைக்க 2கோடி செலவாகிறது. ஒரு கோபுரத்தின் மூலம் 15 கி.மீ கவரேஜ் செய்ய முடியும். 8 கி.மீ தொலைவிற்குள் உள்ளவர்கள் தெளிவாகவும், முழுமையாக பயன்படுத்தலாம். தொலைவை பொறுத்து மோடம் தேர்வு செய்யவேண்டும். 500 மீக்குள் இருந்தால் 2940 மதிப்புள்ள டேட்டா கார்டு மூலமும், 3 கி.மீவரை 4410 மதிப்புள்ள வீட்டிற்குள் பயன்படுத்தும் மோடத்தையும், அதற்கு மேல் 5250 மதிப்புள்ள மொட்டை மாடியில் பொருத்தக்கூடிய மோடம் மூலம் சேவையை பெறமுடியும்.
200 முதல் 7000 வரை இச்சேவை பல்வேறு திட்டங்களில் கிடைக்கிறது. 750 மாதகட்டணத்தில் 2எம்பி பிஸ் வேகத்தில் லிமிடெட் பிளா னும், இதேகட்டணத்தில் 512 கேபிபிஸ் வேகத்தில் அன்லிமிடெட் ஹோம்பிளானும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இச்சேவைக்கு ரோ மிங் வழங்கப்பட்டுள்ளது. கம்பியில்லா இணைப்பு என்பதால் பழுது எற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோபாலகிருஷ்ணன் தொகுத்தார். தொலைபேசி ஆலோசனை க்குழு உறுப்பினர் மகேஷ், பி.ஆர்.ஓ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
|
No comments:
Post a Comment