இணையத் தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் இணையத் தளங்களை பார்க்கிறார்கள்.
பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் கூறியதாவது:-
பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் ஆட்சேபத்துக்குரிய பல பதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க 21 இணையத்தள நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.
மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும் 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும்.
இவ்வாறு டெல்லி மாஜிஸ்திரேட் கூறினார்.
|
No comments:
Post a Comment