Tuesday, March 8, 2011

உங்கள் நலம் கேள்விகள் பதில்கள்


மாதவிலக்கின் முன்பாக தோன்றும் அறிகுறிகளும் கருத்தரித்தலும்
1. ஒவ்வொரு முறை எனக்கு பீரியட்ஸ் வரும்போதும், அதற்குமுன் நான் கருத்தரித்தது போலவே தோன்றுகிறது. இரண்டுக்கும் என்னால் வேறுபாட்டை உணரமுடியவில்லையே?
பீரியட்ஸ் வரும்முன் தோன்றுகிற பிரச்சினைகளை பிரிமென்ஸ்ட்சுரல் சின்ட்ரோம் என்று சொல்கிறோம். அந்த நேரத்தில் தேவையில்லாத, காரணமற்ற மன அழுத்தம் தோன்றலாம். ஒரு சின்ன எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். மூட் இப்படியும் அப்படியும் மாறிக் கொண்டிருக்கலாம். வயிறு லேசாக உப்பினமாதிரி தோன்றலாம். மார்புகளில் லேசான வலி இருக்கலாம். உணவின் மேலான க்ரேவிங் அதிகரிக்கலாம். முகப்பருக்கள் வரலாம். ஒரு குழப்பமான மிக்ஸ்ட் ஃபீலிங் இருக்கலாம். இந்த மாதிரியான பிரச்சினைகளை மாதவிலக்கு வருவதற்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு சந்தித்தீர்களானால் இவற்றை பிரி மென்ஸ்ட்ருரல் சின்ட்ரோம் என்று எடுத்துக் கொள்ளவும். கூடவே அடுத்த முடிவாக மாதவிலக்கு ஏற்பட்டு விடும். ஒருவேளை இதெல்லாம் வந்து பீரியட்ஸ் வராமல் ஐந்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போனால் உடனே யூரின் டெஸ்ட் வீட்டிலேயே எடுத்துப் பாருங்கள்.
தேவைப்பட்டால் டாக்டரை அணுகுங்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை
2. என்னுடைய 7 வயது குழந்தைக்கு வயிற்றில் பூச்சி பிரச்சினை இருக்கிறது. நிறைய சிரமப்படுகிறான். என்ன செய்வது?
வயிற்றில் பூச்சிகளால் குழந்தைகள் நிறைய தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். நிறைய அரிப்பும், மலத்துவாரத்திற்கு அருகில் ஒரு அன்கம்பர்டபிள் நிலையும் தொடர்ந்து நீடிக்கும். குழந்தைகளை பெரும்பாலும் ‘பின்வார்ம்’ வகைகள்தான் பாதிக்கின்றன. அடிக்கடி, தொடர்ந்து பூச்சி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிற நிலை, உங்கள் குழந்தை விளையாடும் மற்ற குழந்தைகளுக்கு இருப்பதால் வரலாம். இதனை ‘க்ராஸ் இன்பெக்ஷன்’ என்கிறோம். இதற்கான மருந்தை உங்கள் குழந்தை மட்டுமல்லாது, வீட்டில் எல்லோரும் உட்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையின் தோழர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பூச்சி தொற்றும் சுழற்சி உடைந்து மறுபடியும் வராமல் தடுக்க முடியும். தொற்றி இருக்கிற குழந்தை அரிப்பு தாங்காமல் சொரிந்த கொள்வதால் பூச்சியின் முட்டைகள் குழந்தையின் விரல் நகங்களில் இருக்கும். இதன்மூலம் மற்றவர்களுக்கு பரவும். ஆக விரல் நகங்களை கட் செய்யுங்கள். பச்சைக் காய்கறிகளில் இருந்துகூட சிலநேரம் பரவலாம். தடுக்க நல்ல கொதிநீரில் காய்கறிகளை சிறிது நேரம் போட்டு கட் செய்யலாம்.
தொடரும் முதுகுவலி
3. முதுகுவலி எப்படி வருகிறது?
இதற்கு நேரடி பதிலை ஒரு நிபுணரால் கூட சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய அனாடமியில் முதுகுதான் மிக சிக்கலான நுட்பங்களைக் கொண்டது. ஆக முதுகுவலி வருவதற்கான காரணங்களும் மிக சிக்கலானது. எண்பத்தைந்து சதவிகித முதுகுவலிக்கு காரணம் தெரியமுடியவில்லை என்பதுதான் நிறைய நிபுணர்களின் கருத்து. தவறான எடை, தவறாக நிற்பது, தவறாக உட்காருவது, உட்பட நாம் செய்யும் இயல்பான தவறுகளிலேயே முதுகுவலிக்கு காரணங்கள் நிறைய இருக்கிறது. மருத்துவரின் உதவியுடன் சரியான சிகிச்சை அவசியம்.
சிறுநீரகக் கல் வராமல் தடுக்க வழி
4. எனக்கு 40 வயது. சமீபத்தில்தான் கிட்னி ஸ்டோன் எடுக்கப்பட்டது. திரும்ப வந்து விடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் லெமன் ஜுஸ் குடிக்கச் சொல்கிறார். வேறு என்ன செய்வது?
‘ரீனல் கால்குலஸ்’ என்கிற இந்தப் பிரச்சினை திரும்ப வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு ஆய்வின்படி 66 சதவிகிதம் திரும்ப வருகிறது அடுத்த ஒன்பது வருடங்களுக்குள் என்கிறார்கள். ஏற்கனவே நிறைய தண்ணீர் குடிக்கிறீர்கள். இது சரியான விஷயம். நிறைய பேருக்கு இந்தக் கற்கள் திரும்ப வருவதற்கு முக்கியக் காரணம் சரியான தண்ணீர் குடிக்காமல் விடுவதுதான். நிறைய நார்ச்சத்துள்ள பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். தவிர உங்களுக்கு ஏற்பட்ட கல்லை பரிசோதனை செய்திருந்தால் அதற்கேற்ப தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒரு டயட்டீசியன் உதவியுடன் முடிவெடுங்கள். இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் டீ, கோகோ கோகோ கோலா போன்ற பானங்கள், டோடி போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் இருக்கும் மற்றபடி லெமன் ஜுஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
ரக்கு அடித்தால் வரும் முகவீக்கத்தை தவிர்க்க வழி
5. எனக்கு 25 வயதாகிறது. கடந்த மூன்று வருடங்களாக குடிக்கிற பழக்கம் இருக்கிறது. ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து பெக். மாதத்திற்கு மூன்று முறை குடிக்கிறேன். அந்த நாட்களில் காலையில் எழுந்தால் முகம் வீங்கி, சிவப்பாகி விடுகிறது. இந்தப் பிரச்சினை சமீபமாக அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது?
உங்களுக்கு ஆல்கஹால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தோன்றுகிறது. உங்கள் பிரச்சினையை ஆன்ஜியோ எடிமா என்கிறோம். குடிப்பதால் இது வருவதால் அதை நிறுத்துவதுதான் நல்லது. நீங்கள் குடிக்கிற கம்பெனியின் பானத்தை வைத்து அலர்ஜி டெஸ்ட் கூட எடுத்துப் பார்க்கலாம். சிலருக்கு விஸ்கியில் இருக்கிற சிவப்பு நிறத்தால் அலர்ஜி வரலாம். அப்படி என்றால் நிறமற்ற பானங்களை பயன்படுத்திப் பாருங்கள். ஆனால் சரியான அட்வைஸ் குடிப்பதை நிறுத்துவதுதான். சில நேரம் இந்த அலர்ஜி பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விடலாம்.
கண்ணில் உண்டாகும் பிரச்சினை
6. கண்ணில் ஏற்படுகிற மஸ்குலர் டிஜெனரேஷன் என்கிற பிரச்சினை எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க முடியுமா?
வயதாவதால் ஏற்படுகிற இந்த ஏஜ்லேடட் மஸ்குலர் டிஜெனரேஷன் என்கிற பார்வையை இழக்க வைக்கிற பிரச்சினையை தடுக்க முடியாது. மெல்ல மெல்ல முகம் தெரிந்து கொள்வது, படிக்க முடியாமல் தடுப்பது போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். இந்த நிலை வராமல் தடுக்க எதுவும் வழிகள் இல்லை. ஆனால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால் போன்றவை இருந்தால் இந்தப் பிரச்சினை சீக்கிரம் வரலாம். புகைபிடிப்பதால் மூன்று மடங்கு இந்த பிரச்சினை வருகிற ரிஸ்க் அதிகரிக்கும். உணவில் ஒமேகா 3 ஃபேட்டிஆரிட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது பிரச்சினையை சீக்கிரம் வராமல் தடுக்க உதவும். அதிகமான சூரிய ஒளியில் செல்லாதீர்கள். இந்தப் பிரச்சினை வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வருடத்திற்கு மூன்று முறை உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சீக்கிரமாக கண்டறிவதின்மூலம், பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம். இதனைத் தெரிந்து கொள்ள இப்போது CT ஸ்கேன் மாதிரி ஒரு ஸ்கேன் வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை ட்ரை, வெட் என்று இரண்டு வகையில் வரலாம். புதிய மருந்துகள் தற்போது இதற்காகக் கிடைக்கின்றன. கண் மருத்துவரின் உதவி தேவை.

No comments:

Post a Comment