Tuesday, March 8, 2011

போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!


நண்பர்களே! நாம் இயங்கு தளத்தில் போல்டர்களை அதிகமாக கையாளுகிறோம்.  இதில் நம்முடைய கோப்புகளை வகையாக பிரித்து வைத்து பயன்படுத்துகிறோம். இந்த போல்டர்கள் அனைத்தும் ஒரே வண்ணமாக அதாவது இயல்பு நிலையில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நம் விருப்பப்படி வண்ணம் மாற்றினால் எப்படி இருக்கும்.வகை வாரியாக வண்ணம் கொடுத்தால் பார்க்கும் போதே புரிந்து கொள்ளலாம் அல்லவா?

இதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவுகிறது.பதிவிறக்க இங்கு கிளிக் செய்க.

இந்த மென்பொருளை நிறுவிய பிறகு ஏதாவது ஒரு போல்டரின் மீது ரைட் கிளிக் மெனுவில் கீழே உள்ள படத்தின் படி போல்டர் ஹைலைட் என்று இருக்கும்.


இதை கிளிக்கினால் அல்லது மவுஸ் கர்சரை அதன் மேல் கொண்டு சென்றால் பல வண்ணங்களில் போல்டர்கள் இருக்கும். இதில் நீங்கள் தேர்வு செய்யும் வண்ணம் உங்கள் போல்டருக்கு வந்திருக்கும். 
இந்த மென்பொருள் மூலம் நான் சில போல்டர்களின் வண்ணங்களை மாற்றி இருக்கிறேன்.அதன் படம் கீழே.

No comments:

Post a Comment