Tuesday, March 8, 2011

வீட்டில் ஒரு மூலிகைத் தோட்டம் செம்பரத்தை


natpuசெம்பரத்தை மேகவெட்டை, தீராப் பிரமியொடு, வம்பு இரத்த வெள்ளை,  வழுவழுப்பும் –வெம்பும் பெரும்பாடு, இரத்த பித்தபேதம் அகற்றும் கரும்பாம் மொழிமயிலே காண்’’

இதன் பொருள்: செம்பரத்தம் பூ, மேக நோயால் வரும் வெட்டை, தீராத பிரமியரோகம், இரத்தப் பித்தப் பிரமேகம், பெரும்பாடு, இரத்த பித்தம் இவைகளை நீக்கும்.
வளரும் இடம்: இது பெரும்பாலும் வீடுகளிலும், பூங்காக்களிலும் வைத்து வளர்க்கப்படுகின்றது. பம்பையாக அடர்ந்து வளரும். 6 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நீர் உள்ள பூமியில் நன்கு வளரும். வெயிலும் நன்கு அடிக்க வேண்டும். வெயில் அடிக்கும் இடத்தில் இல்லை என்றால், நன்கு பூக்காது.

பயிர் செய்யும் முறை: தரையை நன்கு கொத்தி மட்கிய எருவைப் போட்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும். இரண்டு அடிக்கு இரண்டடி இடமே போதுமானது. இதன் விரல் மொத்தக் கிளையை வெட்டி ஒரு முழம் எடுக்கவும்.
5’’ அங்குல நீளக் கிளையைப் பூமியின் உள் புதைக்கவும். மேலே நீட்டிக் கொண்டு இருக்கும் கிளையின் முனையில் சாணியை வைத்து மூடவும். இதனால் கிளை சீக்கிரம் காயாது. காலை மாலை தண்ணீர் ஊற்றவும். 15 நாளில் மெல்லத் துளிர்விட ஆரம்பிக்கும். தண்ணீர் ஊற்ற ஊற்ற நன்கு வளரும்.
இப்பொழுது பல வண்ணங்களில் பூக்கும் செம்பரத்தைச் செடிகள் உள்ளன. பொதுவாக இதில் சிவப்பு வண்ணப் பூ பூக்கும் செடியில் உள்ள பூவையே மருந்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
செம்பரத்தையில் ஒரே இதழுடன் பூ பூக்கும் செடிகளும், அடுக்கு அடுக்காகப் பூ பூக்கும் செடிகளும் உள்ளன. வைத்தியத்திற்கு ஓர் இதழ் உடைய பூவையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அடுக்குச் செம்பரத்தையையும் பயன்படுத்தலாம்.
இது ஆறு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பிக்கும்.
இந்தச் செடியை வீட்டின் முன் பகுதியிலும், காம்பவுண்டின் உள்ளேயும் வைத்தால் அழகாய் இருக்கும். இதற்குத் தண்ணீர் அதிகம் விட வேண்டியது இல்லை. இதனைப் பாதுகாக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டியது இல்லை.
மருந்து செய்முறைகளும், தீரும் நோய்களும் :
  1. பூச்சூரணம்:
இதன் பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்த வேண்டும். நன்கு காய்ந்ததும் உரலில் போட்டு இடித்துச் சூரணம் செய்யவும்.
இதில் அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை சாப்பிடலாம். உடன் பால் சாப்பிடலாம். 20 அல்லது 25 நாளிலேயே உடல் சூடு தணியும். 90 நாட்களில் பெண்களுக்கு வரும் வெள்ளை வெட்டை நோய்கள் குணம் ஆகும்.
தீட்டுக் காலங்களில் நிற்காமல் போகும் இரத்தம் கட்டுப்பட்டு நீங்கும். பெரும்பாடும் தீரும்.
இந்தச் சூரணத்தை 3 முதல் 6 மாதங்கள் சாப்பிடத் தோல் நோய்கள் நீங்கும். இருதயம் சம்பந்தமான எல்லா நோய்களும் நீங்கிவிடும். இதை நம் இதயம் நன்றாக இருக்கும்போதே, தினம் 5 பூ முதல் 10 பூ வரை சாப்பிட இருதய நோயே நம்மிடம் வராது. தோலின் சுருக்கம் நீங்கி அழகு வரும்.
  1. பூவைப்  பயன்படுத்தும்  மற்றும்  ஒரு  முறை: 
  2. natpu
பத்து அல்லது பதினைந்து பூக்களின் இதழ்களை எடுத்து, நெய்யில் வதக்கி 40 – 50 நாட்கள் சாப்பிட வேண்டும். காலை 6 மணி - மாலை 4 மணிக்குச் சாப்பிட வேண்டும்.
இது பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை சம்பந்தமான பல நோய்களை நீக்கும். வெள்ளை, வெட்டை, இரத்த ஒழுக்கு யாவும் நீங்கும்.
40 – 50 நாட்களில் குணம் தெரியவில்லை என்றால், மேலும் சில நாட்கள் சாப்பிட்டால் கண்டிப்பாய் குணம் ஆகும்.
  1. குளிக்கும்  தூள்: 
இதன்  காய்ந்த  இலை,  கார்போக அரிசி,  சந்தனம்,  காய்ந்த குப்பை மேனி, காய்ந்த தும்பை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோல், வெந்தயம், பச்சைப்பயறு இவைகளைச் சமமாக எடுத்துக் கொள்ளவும். மிஷினில் கொடுத்துச் சீயக்காய்த்தூள் போல் அரைத்துக் கொள்ளவும்.
மருந்து செய்தாயிற்று.
நாம் குளிக்கப் போவதற்கு 30 நிமிடம் அல்லது 45 நிமிடம் முன் தண்ணீரில் இந்தத் தூளைத் தேவையான அளவு கலந்து உடல் முழுதும் பூசிக் கொள்ளவும். தலையிலும் தடவவேண்டும். பிறகு நன்கு தேய்த்துக் குளிக்கவும். தோலில் உள்ள சொறி, சிரங்கு, அழுக்கு யாவும் நீங்கிப் பளபள எனத் தோல் விளங்கும். முடி நன்கு வளரும். பொடுகு நீங்கும்.
  1. தலைக்குத்  தேய்த்துக்  குளித்தல்: 
இதன்  இலைகளையும்  பூக்களையும் அரைத்துத் தலையில் தேய்த்து வைத்து இருந்து குளிக்கவும். 1 அல்லது 2 மணி நேரம் இருக்கலாம்.
ஆரம்ப நாட்களில் தலையில் தேய்த்த சிறிது நேரத்தில் குளித்துவிட வேண்டும். இல்லை என்றால் சளி பிடித்துக்கொண்டு தொல்லை தர ஆரம்பிக்கும். சில நாட்கள் சென்றபின் நீண்டநேரம் வைத்து இருக்கலாம். கெடுதல் செய்யாது.
முடியின் அழுக்கு நீங்கும். பளபளப்புடன் அழகாக இருக்கும். முடிகொட்டுவது நீங்கும். பொடுகு போய்விடும். வாரம் இரண்டு முறை குளிக்கலாம். முடியாதவர்கள் ஒரு முறையாவது கண்டிப்பாகக் குளிக்கவும்.
  1. சர்பத்  செய்யும்  முறை: 
natpuசிலர் பூவைச் சாப்பிடக் கஷ்டப்படலாம். அவர்கள் சர்பத் செய்து சாப்பிடலாம். கால் கிலோ பூவை அரைத்துக் கொள்ளவும். 1 (அ) 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டவும். பின் 1 (அ) 2 கிலோ சர்க்கரை கலந்து அடுப்பில் வைத்து எரிக்கவும். தண்ணீர் கொதித்துச் சுண்டும்.
நல்ல மணத்துடன தேன் போன்ற இளகிய பாகு பதத்தில் இறக்கிவைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி பாகில் தேவையான அளவு தண்ணீர் கலந்து சாப்பிடவும்.
இந்தச் சர்பத்தில் சிறிது சிட்ரிக் ஆசிட் கலந்து வைத்தால் சர்பத் நீண்ட நாள் வரும். கெடாது.
  1. செம்பரத்தை லேகியம்:
ஓர் இதழ் உடைய செம்பரத்தம்பூ 100 எடுத்துக்கொண்டு மிக்சியில் வைத்து மசிய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.    1 (அ) 4 கிலோ கல்கண்டு அரைத்துப் பொடி செய்யவும். இரண்டு எலுமிச்சம்பழச்சாறில் கலந்து கொள்ளவும். விழுதையும் கலந்து அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு நெய் கலந்து அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும்.
இது பழ ஜாம் போல் சாப்பிட நன்றாக இருக்கும். வெட்டை நீர் என்று கூறும் நோய் 48 நாளில் பஞ்சாய்ப் பறந்து போகும். இதய நோய் குணமாகும். காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுப் பால் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment