Tuesday, March 8, 2011

பெருகிவரும் கேன்சரைத் தடுப்பதில் துளசி

natpu
“ஐயம், வயிற்று உளைச்சல், அஸ்திசுரம், தாகமும் போம்,
வைய சுர மாந்தம், பறக்குங்காண் – மெய்யாக
வாயின் அரோசிகம் போம் வன்காசம் சூடுன்ன
தூய துளசி தனைச் சொல்”
இதன் பொருள் : துளசியினால் கபம், வயிற்று உளைச்சல், எலும்பு சூட்டுச் சுரம், தாகம், மாந்த சுரம், ருசியற்ற தன்மை போகும்.

வளரும் இடம் : காக்கும் கடவுளான திருமாலின் வைணவத் திருக்கோயில்களின் ஸ்தல விருட்சமாக (செடியாக) இருக்கும் துளசி, நீருள்ள இடங்களில் நன்கு வளரும். வறண்ட பூமியில் செழுமையின்றி வளர்ந்து இருக்கும்.
இது திருமாலுக்கு உகந்த மூலிகை. பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருவதை நாம் அறிவோம். இன்றும் பலர் வீடுகளின் முன்னே துளசி மாடம் கட்டி, அதில் துளசிச் செடியை வைத்து வளர்த்து வணங்குவதைக் காணலாம். தண்ணீர் ஊற்றுவதற்கு ஏற்றபடி நன்கு வளரும்.
     துளசியில் பல வகைகள் உண்டு. அவை,
1. பெருந்துளசி                  
2. கருந்துளசி
3. இராமதுளசி                  
4. வெண்துளசி
5. கிருஷ்ணதுளசி               
6. சிவதுளசி
7. நாய்த்துளசி                  
8. காட்டு ராமத்துளசி
9. எலுமிச்சந்துளசி              
10. காட்டுத்துளசி
11. லட்சுமித்துளசி               
12. கற்பூரத்துளசி
13. செந்துளசி                   
14. சிறுதுளசி
15. கல்துளசி                   
16. முள்துளசி
17. சுணைத்துளசி               
18. நிலத்துளசி
19. கரியமால்துளசி              
20. நீர்த் துளசி
21. விசுவதுளசி                 
22. சிவப்புத்துளசி
23. திருத்துளசி                 
24. நல் துளசி.
என இருபத்து நான்கு வகை துளசிகள் உள்ளன எனச் சிற்சபை அவர்கள் தம் நூலில் கூறி உள்ளார்.
இவற்றில் கருந்துளசியே மிகவும் பயன் உடையது. இந்தத் துளசி வகைகளில் நாய்த்துளசி என ஒருவகை உண்டு. அதைக் கஞ்சாங்கோரை எனக் கிராமப் பகுதிகளில் கூறுவர். இந்த நாய்த்துளசி விவசாயிகளுக்கு மிகவும் பயன் தருவதாகும்.
அறுவடை செய்த நெல்லை, பத்தாயம், குதிர் போன்றவைகளில் போட்டு வைப்பர். அப்போது சில பூச்சிகள் நெல்லை அரித்துத் தின்றுவிடும்.
இதைத் தடுக்கக் காயவைத்தக் கஞ்சாங்கோரையை இடைஇடையே போட்டு வைப்பர். பூச்சிகள் நெருங்கிக் கூடப் பார்க்காது. நெல் நன்கு பாதுகாக்கப்படும்.
இதே கஞ்சாங்கோரையை உடலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளுக்கும் அரைத்துப் போடுவர். நோய் நீங்கிவிடும்.
பயிர் செய்யும் முறை : இரண்டு அடிக்கு இரண்டடி மண்ணை நன்கு பக்குவம் செய்யவும். மட்கிய எருவைப் போட்டுக் கிளறி விடவேண்டும். ½ அங்குல ஆழத்தில் விதைகளைப் போட்டு மேலே மண்ணைத் தூவித் தண்ணீர் விட வேண்டும்.
ஒரு வாரத்தில் அல்லது பத்து நாளில் முளைவிட்டு வளரும். நிறையச் செடிகள் இருக்கலாம். தண்ணீர் விடவிட நன்கு வளரும்.

மருந்து செய்முறைகளும் – தீரும் நோய்களும் :

natpuமற்ற துளசிகளை விட கருந்துளசியே மிகுந்த பயன் தரக்கூடியது.
     1. இலைச் சூரணம் : துளசி இலைகளைப் பறித்து, இலையில் படிந்திருக்கும் புழுதி, மண் போகும்படித் தண்ணீரில் மென்மையாக அலச வேண்டும். தண்ணீர் போகும்படி உதறி ஒரு துணியின் மேல் போட்டுக் காய வைக்க வேண்டும். வெயிலில் போடவே கூடாது.
காய்ந்த இலை பத்துப் பங்கு என்றால் பொன்வறுவலாக வறுத்த மிளகு ஒரு பங்கு சேர்த்து, இடித்துத் துணியில் அல்லது சிறு கண் உள்ள சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாவு இயந்திரத்தில் இப்பொழுது பெரும்பாலும் அரைக்கின்றனர். அதன் சூட்டில் பச்சிலையின் பண்பு சிறிது குறைந்துவிடும். ஆகையால் இடித்துக் கொள்வதே சிறந்தது.
இதில் அரைத் தேக்கரண்டி வாயில் போட்டு தண்ணீர் அல்லது பால் சாப்பிட வேண்டும்.  
காலை 6 மணி – மாலை 4 மணி என்ற இந்த இரணடு வேளை சாப்பிட்டால் போதும். இச்சூரணம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இதைவிட மிக விரைவாக, நன்கு வேலை செய்யும் சூரணமும் உண்டு. அந்தச் சூரணம் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது.

2. வேறு ஒரு சூரணம் : மழை பனிக் காலங்களில் சிலருக்குச் சளி பிடித்துக் கொண்டு மிகவும் தொல்லை தரும். இப்படிப்பட்டவர்கள் மழை வருவதற்கு முன்பே கீழ்க்கண்ட சூரணம் செய்து வைத்துக்கொண்டு இதைக் கஷாயமாகவோ அல்லது சூரணமாகவோ சாப்பிட்டு வர மழை பனிக் காலங்களில் சளி, தும்மல் நெருங்கவே நெருங்காது.
1. நிழலில் காய்ந்த துளசி இலை 250 கிராம்
2. மிளகு 25 கிராம்
3. சித்தரத்தை 15 கிராம்
4. அரிசி திப்பிலி 15 கிராம்
5. அதிமதுரம் 15 கிராம்
6. கிராம்பு 10 கிராம்
7. ஏல அரிசி 10 கிராம் எடுத்துக் கொள்ளவும்.
     துளசியைத் தவிர மற்ற சரக்குகளைத் தனித்தனியே பொன்வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உரலில் இடித்துத் துணி அல்லது சிறு கண் சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். மருந்து தயார் ஆகி விட்டது.
அரைத் தேக்கரண்டி மருந்தை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் அல்லது பால் சாப்பிடவும். காலை மணி 6க்கும் – மாலை மணி 4க்கும் சாப்பிட வேண்டும். இப்படி 40 நாள் சாப்பிட்டாலே போதும்.
இப்படிச் சூரணம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் 15 கிராம் பொடி எடுத்து 250 மில்லி தண்ணீர்விட்டு, 150 மில்லியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதில் 50 மில்லி தண்ணீர் எடுத்து, காலை மணி 6க்கும் மாலை மணி 4க்கும், இரவு படுக்கும்போதும் சாப்பிடவும்.
சாப்பிடக் கஷ்டமாக இருந்தால் பனைவெல்லம் போட்டுக் கொள்ளவும். சிறிது தேனும் இருந்தால் கலந்து கொள்ளலாம். இப்படி ஒரு மாதம் சாப்பிட மழைக்காலம் பனிக் காலங்களில் வரும் சளி வரவே வராது. அப்படி மீறி சளி வந்தால் மீண்டும்  சாப்பிட்டால் சளி ஓடிவிடும்.
     3. குழந்தைகளுக்குச் சளி பிடிக்காது இருக்க : பத்து அல்லது பதினைந்து இலைகளைப் பசும்பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை கலந்து குழந்தைக்கு அடிக்கடி தந்தால் குழந்தைகளுக்குச் சளியே பிடிக்காது. குழந்தைக்கு நன்கு பசி உண்டாகும். விரும்பிப் பால் குடிக்கும். நோய் எளிதாக நெருங்கவே நெருங்காது.
பெரியவர்களும் 20 அல்லது 30 இலைகள் பாலில் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல் நோயின்றி இருக்கும்.
     4. ஈரலுக்கும் இருதயத்திற்கும் பலம் வர : காய்ந்த துளசி இலை 50 கிராமில் பத்துப் பங்கு நீர் விட்டு நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சவும். இதை வடிகட்டிக் காலை மணி 6க்கும் மாலை மணி 4க்கும் 50 மில்லி கிராம் கஷாயம் சர்க்கரை கலந்து சாப்பிடவும். பனைவெல்லமும் தேனும் கலந்து சாப்பிடலாம்.
48 நாளில் இருதயத்தையும் ஈரலையும் பலப்படுத்தும். கபம் ஓழியும். பெண்கள் இந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டால் பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும்.
இந்தக் கஷாயத்தை நீண்ட நாட்கள் சாப்பிட ஆஸ்த்மா குணம் ஆக வாய்ப்புண்டு.
                5. பேன்கள் சாக : வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை துளசி, வேப்பிலை இரணடையும் அரைத்துத் தலையில் தடவி அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின் குளிக்கவும். இப்படி மூன்று நான்கு வாரங்கள் செய்ய பேன் சுத்தமாய்ச் செத்துவிடும்.
     6. கருத்தடை மருந்து : இன்று பெரும்பாலோர் ஒன்று அல்லது இரணடு குழந்தைகளே போதும் என எண்ணுகின்றனர். குழந்தை பிறந்தபின் கருத்தடை செய்து கொள்கின்றனர். இன்னும் சிலர் ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் எனக் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இப்படி இல்லாமல் 20 இலைகள் நாளும் சாப்பிட்டு வந்தாலே கரு தரிக்காது.
natpuகுழந்தை வேண்டும் என்றால் துளசி இலை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் கரு தரித்துக் குழந்தை உண்டாகும். உடலுக்கு எந்தத் தீய விளைவுகளும் ஏற்படாது.
     7. புகையிலை போடுவதை நிறுத்த :இன்று கிராமப் பகுதிகளில் பலர் புகையிலை போடுகின்றனர். புகையிலையின் கொடுமை உணர்ந்து நிறுத்தலாம் என்றால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். கடைசியில் வாயில் புற்றுநோய் வந்து சாகின்றனர்.
புகையிலை போடுவதை இந்தத் துளசியால் எளிதாக நிறுத்தி விடலாம்.
துளசியைப் பறித்துக் கொண்டு வந்து நீரில் புழுதி மண் போக அலசி, நிழலில் காய வைக்கவும். இது ஏழு எட்டு நாட்களில் நன்கு காய்ந்து விடும். இதை ஒரு கண்ணாடிப் புட்டியில் போட்டு வைக்கவும். இதன் பக்கத்தில் சிறிய புட்டியில் மிளகு கொஞ்சம் வைத்துக் கொள்ளவும்.
புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் புகையிலை நினைவு வரும்போது எல்லாம், இந்த்த் துளசியைத் தேவையான அளவு (எப்போதும் போடும் புகையிலையின் அளவு) எடுத்து வாயில் போடவும். புகையிலை காரம் வரும் அளவிற்கு மிளகையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவும்.  மென்மையாக மென்று வாயில் அடக்கிக் கொள்ளவும்.
புகையிலை போடும்போது வரும் உமிழ்நீரைத் துப்பிவிடுவர்.
ஆனால் துளசி போடும்போது வரும் உமிழ்நீரைத் துப்ப வேண்டியது இல்லை. விழுங்கிவிடவும். இதுவே ஒரு விரும்பத்தக்கச் சுவையாக இருக்கும். புகையிலை போடும்போது எச்சிலை வெளியே துப்பிவிடுவதால் செரிமானம் சரியாக ஆவது இல்லை. உணவு நன்கு உண்ண முடிவது இல்லை.
காரம் சாப்பிட முடியாத அளவிற்கு வாய் புண்ணாக இருக்கும். சில ஆண்டுகள் சென்றதும் வாயிலோ வயிற்றிலோ புற்றுநோய் வந்து சாக வேண்டியதுதான்.
ஆனால் துளசி போடும்போது எச்சில் உள்ளே போவதால் செரிமானம் நன்கு ஆகும். உணவு சாப்பிட முடியும். மிளகிற் குக் கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு. எனவே கொழுப்பும் குறையும். சளியைச் சுத்தமாக ஒழிக்கும்.
இப்படி ஒரு மாதம் போட்டால் புகையிலை போடும் எண்ணம் குறைந்து விடும். போட வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்காது. புகையிலை போடும் எண்ணம் குறைந்தபின் துளசி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
கேன்சருக்குப் பெரும் காரணமான புகையிலை போடும் கெட்டப் பழக்கத்தை நிறுத்தும் துளசியை நாம் இறைவனுக்கு இணையாக வைத்துக் கும்பிடுவது தவறு இல்லை.

No comments:

Post a Comment