ருசியை மட்டும் பார்ப்பவரா புரிந்தால், இனி யோசிப்பீங்க
காலையில் எழுந் தது முதல், இரவு தூங்கும் வரை என்னவெல்லாம் “உள்ளே’ தள்ளுகிறோமோ; அது என்ன தான் ஆகிறது, எப்படி நம் உடலில் போய் “வேலை’ காட்டுகிறது என்பதை என் றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
வாய்க்கு ருசியாக எது கிடைத் தாலும் சாப்பிடாதவர் யார் தான் இல்லை. பி.பி., ஷுகர் என்று தெரிந்த பின் தான், எதைப் பார்த்தாலும் பயம் வந்து விடும். அப்படியும் கூட, ஒருபக் கம் மாத்திரையை விழுங்கி, இன் னொரு பக்கம் “கட்டு’ கட்டி விடுவது சிலரின் வழக்கமாகத்தானே இருக்கிறது.
நான்கு வழிகள்: நோய் வந்தால்தான் கவலைப்படுகிறோமே தவிர, நம் உடல் வேலை செய்வது பற்றி எப்போதும் கண்டுகொண்டதே இல்லை. நம் உடலில், அசுத்தங்களை வெளியேற்றும் நான்கு வாயில்கள் உள்ளன;
1. மலக்குடல். 2. சிறுநீர். 3. தோல் 4.சுவாசம். இதில் முக்கிய பங்கு குடலுக்கு உண்டு. குடலில் சிறுகுடல் என்பது பெருங்குடலை விட, நான்கு மடங்கு நீளமானது.
வயிற்றில் போகும் உணவுகள் எதுவும், சிறுகுடலில் ஜீரணிக்கப்பட்டு விடுகிறது. அதை தாண்டி பெருங்குடலுக்கு போகும் போது தான் பிரிக்கப்பட்டு, சத்துக்கள் ரத்தத்திற்கு போகின்றன; அசுத்தங்கள் பிரிக்கப்பட்டு, மலக்குடலுக்கும், சிறுநீரக பைக்கும் போகிறது.
குடலில் சேருவது எப்படி: பெருங்குடலில் போகும் சத்துக்கள் நிறைந்த திரவம், ரத்தத்தில் அனுப்பப்படும் நடவடிக்கை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஆகிறது. திரவமும் திடமும் கலந்த கழிவுகள், பெருங்குடலின் அடிப்பகுதியில் சேமிக்கப் படுகிறது. அங்கிருந்து தான் மலவாயில் வழியாக வெளியேற்றப்படுகிறது.
சிறுகுடல் வழியாக உணவு போகும் போது, அது ஜீரணிக்கும் வரை குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது. அதாவது, உணவு மணிக்கு 0.002 மைல் வேகத்தில் செல்கிறது.
ஆனால், அதுவே, பெருங்குடலில் பல மடங்கு மிதமாக நகர்கிறது. அங்கு தான் உணவு சத்துக்கள், கழிவுகள் 14 மணி நேரம் வரை நகர்கிறது.
ஜீரணிக்காவிட்டால்: எந்த ஒரு உணவும் வயிற்றில் இருந்து குடலுக்கு பயணமானதும் சத்துக்கள், கழிவுகள் பிரிக்கப்பட்டு, சீராக மலமாகவும், சிறுநீராகவும் வெளியேறி விட்டால் எந்த பிரச்னையும்வராது. அப்படி அசுத்தங்கள் வெளியேறுவதில் பிரச்னை ஏற்பட்டால் தான் தொல்லை ஆரம்பம்.
மலச்சிக்கலில் தான் ஆரம்பிக்கும். அதுபோல, குடல் புண்ணில் தான் துவங்கும்; பின்னர், பெரிதாக பாதிக்கப்பட்டு கேன்சரில் போய் கூட விட்டுவிடும். சமீபத்தில், கோவாவில் சர்வதேச குடல் சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடந்தது. “புற்றுநோய்களில் குடல் கேன்சரில் இறப்போர் தான் அதிகம்’ என்று கூறியுள்ளனர்.
இதற்கு காரணம், உணவு முறைகளில் மாற்றம் தான். காரமான, கொழுப்பான, சத்தில்லாத “ஜங்க் புட்’ எனப்படும் குப்பை உணவு பழக்கம் தான் இதற்கு காரணம் என்றும் இதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாதா பாதிப்புகள்:
* பேதி: சில வகை மருந்துகள் சாப்பிடுவது, பாக்டீரியா தாக்குதல் மட்டுமல்ல, டென்ஷன் கூட இதற்கு காரணம். குடலில் போகும் உணவு அவசரமாக வெளித்தள்ளப்பட்டு, சத்துக்கள் குறைவாக பிரிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு.
* மலச்சிக்கல்: நார்ச்சத்து இல்லாத உணவு சாப்பிடுவது, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் காரணம்; கவலையுடன் சாப்பிட்டாலும் ஜீரணிப்பதில் சிக்கல் வரும்.
* குடல் அல்சர்: நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, உணவு முறையில் மாற்றம் போன்றவை காரணம்.
* அப்பெண்டிசிட்டிஸ்: பெருங்குடலின் ஆரம்பத்தில் உள்ள வால் பகுதி அப்பெண் டிக்ஸ். பாக்டீரியா தாக்குதலை தடுக்க பயன் படுகிறது. இதில் பாதிப்பு வந்தால் குடல் வால் அழற்சி என்று சொல்லப்படுகிறது.
தடுக்க வழிகள்: தோல் போர்த்தியிருப்பதால் குடல்களின் தோற்றம் நமக்கு தெரிவதில்லை. ஆனால், அதை பார்த்தால், ஒழுங்காக சாப்பிடுவோம்.
எதையாவது பார்த்தால், குடலை புடுங் குதே… என்று சொல்வதை பார்த்திருப்பீர்கள். குடலுக்கு அந்த எண்ணம் வருவது எப்போது தெரியுமா? நாம் கண்டதையும் சாப்பிட்டு, ஜீரணிக்க முடியாமல் குடலை கஷ்டப்படுத்தும் போது தான். “சே, இந்த மனுஷன் எதைத்தான் தின்னுவது என்ற விவஸ்தையே இல்லையா?’ என்று வாய் இருந்தால் நிச்சயம் குடல் சொல்லியிருக்கும்.
குடலை பாதுகாக்க, பாதிப்பு வராமல் தடுக்க சில வழிகள்:
* அவசரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* “ஜங்க்’ புட் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* குறித்த நேரத்தில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டும்.
* ருசிக்காக கண்டபடி சாப்பிடும் பழக்கத் தை கைவிட வேண்டும்.
* அதிக இனிப்பு, காரம் தவிர்க்க வேண்டும்.
* நார்ச்சத்து, சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்களை சேர்ப்பது மிக நல்லது.
எது இல்லாவிட்டாலும், முதலில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீராவது சாப்பிட்டு வாங்களேன்.
|
No comments:
Post a Comment