Tuesday, March 8, 2011

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1



பிப்ரவரி 22 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்கான சர்வீஸ் பேக் 1 ஐ வெளியிட்டது. இதனைப் பெற விரும்புபவர்கள்http://windows.microsoft. com/enUS/windows/downloads/servicepacks என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பிற்கான குறியீடுகள், திறன் கூட்டும் வசதிகள், நிலையாக இயங்குவதற்குத் தேவையான புரோகிராகள் மற்றும் சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறா நிலையில், நாம் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டர் தானாகவே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். தாங்களாகவே பெற்று இன்ஸ்டால் செய்திடும் வகையில் செட் செய்து வைத்துள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட தள முகவரி சென்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 30 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். நீங்கள் எந்த வகையில் இதனைப் பதிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், இதற்கு 750 எம்பி முதல் 7400 எம்பி வரை உங்கள் ஹார்ட் ட்ரைவில் இடம் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு இந்த பணியை மேற்கொள்ளவும். 
இந்த சர்வீஸ் பேக் வெளியிடுவதற்கு முன் வந்த தொகுப்பினை (prerelease version of SP1) இன்ஸ்டால் செய்திருந்தால், அதனை முழுமையாக அன்இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த பேக்கினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். சில வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகள், இந்த சர்வீஸ் பேக்கினைச் சரியாக இன்ஸ்டால் செய்திட அனுமதிக்காது. வைரஸ் என்று எண்ணிக் கொண்டு தடை விதிக்கும். எனவே ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்குவதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது.
இத்தொகுப்பினை இன்ஸ்டால் செய்வது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ள குறிப்புகளைப் படிக்க http://windows.microsoft.com /enUS/windows7/learnhowtoinstallwindows7servicepack1sp1 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும். 


No comments:

Post a Comment