Tuesday, March 8, 2011

கருகிடும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்லூரி கனவுகள்


வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. 

ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை…ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…

கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது… 

மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது.. அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate

கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க

இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….என்கிற தலைப்பில் நாம் எழுதிய கோரிக்கை மனுவினை உங்களிடம் வைக்கிறோம்..http://velichamedu.wordpress.com/2010/04/24/110/

அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)

இதற்காக நாம் பலவகையான முயற்சிகளை நாம் மேற்கொண்டும்..அரசு மாணவர்களுக்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் மாணவர்களின் கல்விக்கு போய்சேருகிறது என்பதை கண்காணிக்கவும்,திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 நாட்கள் வெளிச்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார்கள்..அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் உதவி எண் 9698151515 துவங்கி மாணவர்களுக்கு உதவிவருகிறோம்…

நாம் என்ன பயந்து இந்த பணியை செய்தோமோ. அது நடக்க துவங்கியது.. என்னவெனில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலா அவர்கள் கடந்த2010 ஜனவரி 6 ம் தேதி அறிவித்த அறிவிப்பில் மொத்த கட்டணத்தையும் அரசே ஏற்கும் என இருந்தது. இதை நம்பி அப்பாவியான 78883 முதல்தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கிக்கு விண்ணப்பித்தார்கள்.. ஆனால் கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருந்தபோது தான் அரசு முதல்தலைமுறை மாணவர்களுக்கான அரசாணை நிர்ணயித்த தொகையை வெளியிட்டார்கள்..குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ 5000 ம்.. சுயநிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 20000 என அறிவிக்க… இதனால்கவுன்சிலிங்க் விண்ணபித்த 78883 முதல்தலை முறை மாணவர்களில் நாற்பத்தியெட்டாயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்தார்கள்.அரசை நம்பி கல்லூரி கனவு கண்ட மற்ற மாணவர்கள் கனவுகள் கருகிபோனது..ஏனெனில் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டிய அரசு குறைந்த பணத்தினை ஒதுக்கிவிட்டு தனது கையை விரித்து கொண்டது..

இது ஒருபுறமிருக்க கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலமை மோசமானது… கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து நம்மை உருகுலைய வைத்தது..கல்லூரி நிர்வாகங்கள் பணம் கவர்மெண்ட் கொடுக்கிறப்போ நாங்க திருப்பி தருகிறோம்.. நீங்க பணத்தை கட்டுங்க என கல்லூரிகள் மிரட்டுகிறார்கள் என்றும், கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்பதாக நம் students Help line 9698151515 ல் தகவல் வந்துகொண்டே இருக்கிறது… விடாது பயணித்தோம்…ஏனெனில் வெளிச்சம் என்பது முதல்தலை மாணவர்களுக்கான கல்வி இயக்கமாக அறிவித்தோம்..இன்று வரை வெளிச்சம் மாணவர்கள் 515 மாணவர்கள் முதல்தலை முறை மாணவர்கள் என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்..

நாம் பயந்ததை போன்று பிரச்சனையை வெளியிட்ட தினமலர் கட்டுரை

தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி


எதை எதையோ பேசும், அறிக்கையாக்கும்,போராட்டமாக்கும் கட்சிகளே,இயக்கங்களே,ஒத்தகருத்துடைய சிந்தனையாளர்களே..இந்த விசயத்தில் மட்டும் உங்கள் கவனம் படவே யில்லையா…

சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் நாங்கள் தான் முதன்முதலில் கல்லூரிகளில் சேர்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமை..இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கான கேள்விகுறி…எப்போதுதான் எமக்காகவும் உம்குரல் எழும்ப போகிறது….பார்ப்போம்..

ஏழைகளின் உயர்கல்விக்கான பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

(இணைப்புகளை இடையிடையே போட்டதற்க்கு மன்னிக்கவும்…எங்கள் வலிகள் அப்படியே பதிவு செய்ய முனைந்தோம்)…

இணைப்புகள்:

பிரச்சாரப்பயணப்படங்கள்:http://velichamedu.wordpress.com/%E0%AE%

பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:


வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு:http://velichamstudents.blogspot.com/2010/04/22.html

No comments:

Post a Comment