சில தளங்களில் போட்டபிள் மென்பொருள் கிடைக்கும் ஆனால் எல்லா மென்பொருளுக்கும் கிடைக்குமாவென்றால் இல்லை என்பதாக பதில் இருக்கும் ஆனால் இங்கு நீங்கள் விரும்பும் எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் அதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது ஆனால் பதிவின் நீளம் கருதி இப்போடு ஒன்றை மட்டுமே எழுதுகிறேன் மேலும் இந்த பதிவின் வரவேற்பை பொறுத்து அடுத்த வழிமுறையும் விரைவில் எழுதப்படும் சரி விஷயத்துக்குள் செல்வோம் நீங்கள் இந்தகையடக்க மென்பொருள் மாற்றி தரவிறக்கவும் இதன் அளவு 7எம்பி-க்கும் குறைவே இதை வின்ரார் கொண்டு விரித்ததும் படத்தில் இருப்பது போல இருக்கும் இது விலையுள்ள மென்பொருள்தான் ஆனால் நான் கொடுத்துள்ளது கிராக் செய்யப்பட்டது தான் இதுவும் ஒருவகை குற்றமே இனி உங்கள் எலியால் இருமுறை கிளிக்கவும் புதிய சிறிய விண்டோ திறக்கும் இதனுள்ளேயே இன்ஸ்டாலேசன் மற்றும் இதற்கான கீயும் இருக்கிறது.
இப்போது நீங்கள் Serial என்பதை கிளிக்கினால் ஒரு நோட்பேட் திறக்கும் அதில் ஐந்து சீரியல் எண்கள் இருக்கிறதா அதில் முதலாவதாக இருக்கும் கீ எண் தான் நமக்கு தேவையானது அதை காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இனி Install என்பதை கிளிக்கவும் இப்போது ஒரு புதிய விண்டோ திறக்கும்.
இனி I accept the terms in the License agreement என்பதன் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் குறி ஏற்படுத்தி பின்னர் Next என்பதை கிளிக்கவும்.
இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Serial Number என்பதில் நீங்கள் முன்னமே காப்பி எடுத்த சீரியல் எண்ணை முதல் கட்டத்தில் ஒட்டவும் இரண்டாவதாக கீழே இருக்கும் கட்டத்தில் உங்கள் விருப்பம் போல ஒரு பெயரை கொடுத்ததும் Install என்பதை கிளிக்கவும் கணினி பற்றி தெரியாதவர்களும் இதை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை விளக்கவும் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்.
இனி மென்பொருளில் கம்பைள் செய்யப்பட்டவைகளி உங்கள் கணினிக்கு காப்பியாகி கொண்டிருக்கும் Next என்பது எனாபிள் ஆனதும் Next கொடுக்கவும்.
இப்போது உங்கள் மென்பொருள் இன்ஸ்டாலேசன் முடிந்தது என்பதாக தோன்றும் இனி நீங்கள் Finish என்பதை கிளிக்கவும் அவ்வளவுதான் இன்ஸ்டாலேசன் முடிந்துவிட்டது.
இனி நீங்கள் உங்கள் கணினியின் Start ->Programs -> VMware -> ThinApp Setup Capture என்பதை கண்டுபிடித்து புரோகிராமை திறக்கவும்.
இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Next என்பதை கிளிக்கவும்.
திறக்கும் இந்த விண்டோவிலும் ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை Next என்பதை கிளிக்கவும்.
இனி இப்படியாக இருக்கும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம் தானகவே அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும்.
இந்த பக்கம் வந்தவுடன் இந்த விண்டோவே மினிமைஸ் செய்துவிட்டு நீங்கள் எந்த மென்பொருளை போர்ட்டபிளாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள், நிறுவி முடித்ததும் இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் மினிமைஸ் செய்து வைத்திருந்த விண்டோவை மேக்சிமைஸ் செய்து Next என்பதை சொடுக்கவும்.
இந்த பக்கம் வந்தவுடன் நீங்கள் நிறுவிய மென்பொருளின் ஸ்நாப்ஷாட் எடுக்க தொடங்கிவிடும் முடிந்ததும் தானகவே அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
இனி இப்படியாக பக்கம் இருக்கும் அதில் நீங்கள் நிறுவிய மென்பொருளின் .Exe மட்டும் தெரிவு செய்யவும் அதிகபட்சம் முதலாவதாக இருக்கும் மற்றவை தேவையில்லை, தெரிவு செய்ததும் Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இந்த பக்கத்தில் USB flash / poratble media (stored in directory with application) என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இந்த பக்கத்தில் Merged isolotion mode என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Project Location என்பதை பிரவுஸ் செய்து நீங்கள் மாற்றும் போர்ட்டபிள் மென்பொருள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்யவும் அடுத்து அதன் கீழே இருக்கும் No compression (fastest for testing builds) என்பது தெரிவாகியிருக்கிறதா என பார்த்துக்கொண்டு Next என்பதில் கிளிக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இனி இப்படியாக வந்ததும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானாக நாம் மாற்ற விரும்பிய மென்பொருளில் ரிஜிஸ்டரி குறிப்புகளை சேமித்ததும் அடுத்த பக்கம் சென்றுவிடும்.
இனி இப்படியான இறுதி பக்கம் வந்ததும் Build Now என்பதை கிளிக்கவும் இதன் மூலம் நமது போர்ட்டபிள் மென்பொருள் கம்பைள் செய்யப்பட்டுவிடும் அல்லது Browse Project என்பதை கிளிக்கி திற்க்கும் போல்டரில் build என்கிற பேட்ச் பைல் இருக்கும் அதை இருமுறை கிளிக்குவதன் மூலமாகவும் கம்பைள் செய்யலாம் அவ்வளவுதான்.
இப்போது உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் bin எனும் போல்டரின் உள்ளே தயாராய் இருக்கும் அங்கு உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் தவிர மற்ற அனைத்தையும் அழித்து விடுங்கள் அது எதுவும் தேவையில்லை மேலும் நீங்கள் ஏற்கனவே நிறுவிய மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் போர்ட்டபிள் மென்பொருளை இயக்கவும், நீங்கள் போர்ட்டபிள் மென்பொருள் இயக்க தொடங்கியதும் சில போல்டர்கள் உருவாகும் அதை நீங்கள் அழித்தலும் மீண்டும் மென்பொருள் இயக்க தொடங்கியதும் அதேபோல போல்டர்கள் உருவாகும் எனவே அந்த போல்டரில் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் திறந்து Hiden கொடுத்து ஓக்கே கொடுத்து விடவும்.
இணைப்பை சொடுக்கி மென்பொருளை பதிவிறக்கி பயன்படுதவும்
|
No comments:
Post a Comment