நாம் தகவல்களை கணினியில் சேமித்து வைப்போம் ஆனால் அது முழுக்க முழுக்க பாதுக்காப்பானது கிடையாது, அதுவும் மற்றவர்கள் நமது தகவல்களை திறந்து பார்க்கவும் வாய்ப்பு உண்டு. நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் இருக்கும் கணினி என்றால் பாதுகாப்பு மிக மிக குறைய்வு அதுவும் கணினி த்டீர் என செயலற்று போனால் நமது தகவல்கள் அழிந்து போகவும் வாய்ப்பு அதிகம். அதனால் நாம் நமது தகவல்களை சேமிப்பதற்கு இதுவரையில் CD , USB , போன்றவைகளை தான் பயன்படுத்தி வந்தோம்.
ஆனால், இவை அனைத்தையும் விட மிகவும் பாதுகாப்பானது நமது தகவல்களை ஆன்லைனில் சேமித்து வைப்பது. அதற்க்கு http://www.adrive.com/என்ற இந்த இணையத்தளம் மிகவும் பாதுக்காப்பானதாக உள்ளது. அது மட்டிமின்றி 50 ஜி.பி அளவிலான சேமிப்பு வசதியை இலவசமாக வழங்குகிறது. இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி அதன் பிறகு நாம் விரும்பும் தகவல்களை அதில் சேமித்து வைக்கலாம். ஆன்லைனில் இருப்பதால் நமது தகவல்களும் பாதுக்காப்பாக இருக்கும். நாமும் நமது தகவல்களை பற்றிய எந்த வித கவலையும் இன்றி இருக்கலாம். நாம் நமது கணினியில் இருந்து அழித்துவிட்டால் கூட இதில் சேமித்தது இருக்கும், எனவே பாதுக்காப்பான சேமிப்பை விரும்புபவர்களுக்கு ஏற்ற வசதி என்பதில் சந்தேகமே இல்லை.
அது மட்டுமின்றி நாம் யாருக்காவது பெரிய அளவிலான file களை அனுப்ப நினைத்தால் முடியாத பட்ச்சத்தில் அதை நாம் இந்த இணையத்தளத்தில் சேமித்து வைத்து விட்டு நம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு இந்த இணையத்தளத்தின் நமதுusername , password ஐ கொடுத்தால் அவர்கள் இந்த இணையத்தளத்தில் உள்ள நமது கணக்கினுள் சென்று அந்த file ஐ டவுன்லோடு செய்து எடுத்து கொள்ளலாம். திருமண வீடியோக்கள், குழந்தைகளின் பிறந்தநாள் வீடியோக்கள் போன்றவற்றை நாம் நம் உறவினர்களோடும், நண்பர்களோடும் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று இதுவரையில் தவித்திருப்போம் ஆனால் இப்போது இந்த இணையத்தளம் மூலம் அதற்கும் ஒரு வழிபிறந்தாச்சு இல்லையா.
www.mozy.com என்ற இந்த இணையத்தளம் 2GB வரையிலும் இலவசமாக ஆன்லைனில் தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது. http://www.4shared.com/ என்ற இந்த இணையத்தளம் 25GB வரையிலும் இலவசமாக ஆன்லைனில் தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது.
நாம் இந்த வசதியை பயன்படுத்த வேண்டுமெனில் இந்த இணையத்தளங்களில் இலவசமாக உறுப்பினர் ஆவதன் மூலம் நாம் இந்த வசதிகளை பெறலாம்.
|
No comments:
Post a Comment