நமது தலைமுடியின் உன்மையான நிறம் வெள்ளைதான், அதில் மெலனின் என்ற நிறம் கலக்கும்பேது தலைமுடி பல நிறங்களை அடைகிறது. தலை முடியானது சருமத்தின் ரோமக்குழியிலிருந்து தோன்றும் இடத்திலேயே மெலனினும் சேர்ந்துவிடுவதால் முடி கறுப்பாக முளைக்கிறது வயது முதிரும்போது அல்லது வயதாகி தளரும்போது ரோமக்குழு மெலனின் உற்பத்தியை நிறுத்தி முடியை இயல்பான வெண்மை நிறத்துக்கு விட்டுவிடுகிறது. சிலருக்கு மெலனின் உற்பத்தி சீக்கிரமே சில ரோமக்குழிகளில் குறைந்துவிடுவதால் இளநரை ஏற்படுகிறது. மெலனின் அளவு, அதன் வேதியல் பண்பு ஆகியவற்றுக்கேற்ப ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி நிறம் ஏற்படுகிறது
|
No comments:
Post a Comment