நாம் புகைப்படக் கருவி கொண்டு ஒரு படம் எடுப்பதிலேயே பல குறைபாடுகளைக் காண்கின்றோம் . இங்கு ஒருவர் உலகத்திலேயே மிகப் பெரிய புகைப்படம் ஒன்றைத் தயாரித்திருக்கின்றார்.
அதன் அளவு 800 மில்லியன் பிக்செல் ஆகும் (762 MP). புகைப்படம் எடுக்க வேண்டிய இடத்தை 300 பகுதிகளாகப் பிரித்து மொத்தம் 1200 புகைப்படங்களைக் கோர்த்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றார் இவர். அனைத்துப் படங்களும் Nikon D3 புகைப்படக் கருவி, 50 mm ஆடி f5.6 எண் வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும்.
ஒவ்வொரு படத்தின் exposureம் அதாவது படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து படம் எடுத்து முடிக்கும் வரை கண்சிமிட்டாமல் ஆடி திறந்திருக்கும் நேரம் 6 நிமிடங்கள் ஆகும்!
இவரால் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நமது கண்ணுக்குத் தெரியும் மொத்த வானம்! வானத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துப் படம் எடுத்துப் பின் கோர்ப்பது என்பது ஒரு மிகப் பெரிய பணி.
2008 முதல் 2009 வரை என கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் இப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு நிமிடத் திறப்பு என்றால் புவியின் சுழற்சி காரணமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களும் நகர்வதால் ஒரு பெரிய கோடு தான் காணக் கிடைக்கும். ஆனால் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்காகவே, புவி சுழலும் வேகத்துக்குத் தகுந்தவாறு தனது புகைப்படக் கருவியும் சுழல்வதற்குகென்று ஒரு கருவியை (small equatorial mount) புவியின் சுழல்திசைக்கு எதிர்திசையில் சுழலுமாறு நிறுவி எப்போதும் ஒரே இடத்தையே 6 நிமிடமும் கண் சிமிட்டாமல் பார்த்துப் படம் பிடிக்குமாறு உருவாக்கியிருக்கின்றார்.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடங்கள் மூன்று.
ஏனெனில் இங்கே தான் வருடத்தின் 11 மாதங்களுக்கு ஒளி மாசுபாடு (light pollution) இல்லாத இருண்ட வானம் காணக் கிடைக்கின்றது. இங்கே தான் European Southern Observatory நிறுவியுள்ள மிகப் பெரிய தொலைநோக்கிகளும் இருக்கின்றன. Atacama பாலையிலுள்ள Chile, La Silla மற்றும் Cerro Paranal ஆகிய மூன்று இடங்களிலிருந்து இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சூரியன் மற்றும் சந்திரன் இல்லாத போது தான் மிக இருண்ட வானம் கண்ணுக்குக் கிடைக்கும். எனவே அப்படியான நாட்களை/நேரங்களைத் தேர்ந்தெடுத்துத் தான் படம் எடுக்க வேண்டும். மேக மூட்டமும் இருக்கக் கூடாது. வானில் தெரியும் நட்சத்திரங்களிடையே இருக்கும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு முந்தைய நாள் எடுத்த இடத்தையும் நினைவு கொண்டு அடுத்த படம் எடுத்திருக்கின்றார் என்பது ஆச்சரியப்படத் தக்க விஷயமாகும்.
முதன் முதலில் எடுத்த படம் Canopus என்னும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு பாகத்தையும் 4 படங்கள் எடுத்து அதில் சிறந்ததைக் கொண்டு தொகுத்திருக்கின்றார்.
மொத்தம் 120 மணி நேரங்கள் தான் புகைப்படக் கருவியின் அருகே இருந்து விழித்திருக்கின்றார் என்றாலும், அதற்கான ஆயத்தங்கள் தான் எத்தனை? முழுக்க முழுக்க இரவிலேயே இந்தப் பணி நிகழ்ந்திருக்கின்றது.
இது இரவில் என்றால் பகலில் இத்தனை படங்களையும் தொகுக்கும் பணியில் இவரது நண்பர் ஈடுபட்டிருந்திருக்கின்றார். மொத்தம் 15000 மில்லியன் பிக்செல் கொண்ட படங்களில் இருந்து இந்த ஒரே ஒரு 800 மில்லியன் பிக்செல் படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 40000 x 20000 பிக்செல் அளவு கொண்ட இப்படத்தின் அளவு 4.42 GB ஆகும்!
இது வரை அகண்ட வானை புவியிலிருக்கும் தொலைநோக்கி கொண்டு இத்தனை துல்லியமாக, இத்தனை பெரியதாக யாரும் படம் எடுத்ததில்லை என்பதோடு இன்றைய தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்தி நேர்த்தியாக உருவாக்கியிருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை.
முதல் படம் பால்வெளி வீதியை மையமாகக் கொண்டு மொத்த வானையும் எடுக்கப்பட்ட 360 டிகிரி நீள்படம் ஆகும். இந்தப் படத்தின் மூலம் நமது உடுமண்டலம் சுருள் உடுமண்டலம் என்பதும், மையத்தில் உப்பி இருப்பதும் எளிதாக உணர முடிகின்றது. நமது பால்வெளி வீதியில் 150000 மில்லியன் நட்சத்திரங்கள் (!) இருந்தாலும் நாம் இருக்கும் பகுதியிலிருந்து இந்தப் படம் மூலம் நமக்குத் தெரிவது என்னவோ 0.0001% மட்டுமே!
இந்தப் படம் எடுத்தவரின் கண்ணோட்டத்தில், அவர் வியப்பது இந்தப் படத்தில் தெரியும் புள்ளிகளாகக் காணப்படும் நட்சத்திரங்கள் அல்லவாம்! கண்ணுக்குத் தெரியாமல் இந்நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் எத்தனை இருக்கும்?! என்று தான் வியக்கின்றார் இவர். குத்துமதிப்பாகக் கணக்குப் பார்த்தாலும் நமது பால்வெளி வீதியிலேயே 1000 பில்லியன் உலகங்கள் இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் படத்தின் தீம் எனப்படும் தலைப்பு. அதாவது "One thousand billions worlds"
இதோ இவர்தான் புகைப்படம் எடுத்த Serge Brunier என்பவர் (படத்தின் மீது அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கவும்)
இவர் புகைப்படங்களைத் தொகுக்க உதவியவர் Frédéric Tapissier
புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்
மேலும் இந்த புகைப்படங்களையும் video வையும் இங்கு சென்று பொறுமையோடு பாருங்கள் படத்தின் ஒவ்வொரு அசைவும் மிக தெளிவாகத் தெரியும் .

|
No comments:
Post a Comment