டோகா கத்தாரில் உள்ள கம்பனியொன்றில் பணிபுரிந்த மலையாளியொருவர் தனது அலுவலக கணனியில் Bittorrent மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கம் மேற்கொண்ட போது சுமார் 46 கணனிகளுக்கு வைரசைப் பரப்பியதன் விளைவாக அந் நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியது.
மேலும் எனது நண்பரைத் தொடர்புகொண்டு விளக்கத்தை கேட்டறிந்தபோது அவ்வியாபார நிறுவனத்தின் கணனிகளின் நாளாந்த செயற்பாடுகள் பகிரும் கோப்புகளால் ஆனது அதாவது சேரிங் பயிலிங் சிஸ்ரம் (Data Bank Master Files Sharing System ) மூலமாக ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு கணனிகள் செயற்பட்டதாகவும் அவ்வேளையில் இவர் அட்மினிஸ்ரேசன் பாஸ்வேர்ட்டை ரகசியமாக பெற்றுக்கொண்டு Bittorrent டை தன் கணனியில் நிறுவி தனது வழமையான தரவிறக்கத்தை மேற்கொண்டபோது வைரஸ் இவரது கணனியிலிருந்து பிற கணனிகளுக்கும் இலகுவாகப் பரவியிருக்கிறது.
சாதரணமாக மின்னஞ்சல் USB மற்றும் CD க்கள் மூலமாக பரவும் வைரஸ்களை பாதுகாப்பதற்கு நாம் எவ்வளவு அவதானமாக இருக்கவேண்டியிருக்கின்றது ஆனால் இங்கே நெட்வொர்க் கோப்புகள் என்றால் கேட்க்கவா வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்நிறுவனம் சாதாரண கணனியிலிருந்து சர்வர் கணனி வரைக்கும் “Symentec Antivirus” பாதுகாப்பானை நிறுவி அப்டேட்டுடன் கண்காணிக்க்பட்டு வந்திருக்கின்றது. அதையும் மீறி 46 கணனிகளை செயற்பாட்டில் இருந்து முடக்கியிருக்கின்றது .
உன்மையில் நாமும் அலுவலகத்தில் பணிபுரியும் போது அதற்குரிய வரையறைகளை மீறிச்செல்லக் கூடாது இன்றைய கணனி வளர்ச்சியின் வேகத்தில் தினமும் புதுப் புது மென்பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன இவற்றையெல்லாம் எங்களது சொந்தக் கணனியில் பயன்படுத்தலாம் இதனால் எங்கள் கணனிக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதை திருத்துவதற்கு ஒருதொகைப்பணம் மட்டுமே செலவாகும் மாறாக அலுவலகக் கணனியில் நாம் ஏற்படுத்தும் தவறுகளால் எங்களது நன்மதிப்பு மட்டுமல்ல வேலையையும் இழக்கவேண்டிவரும் வேலையை இழந்தால் பாதிக்கப்படுவது நாங்கள் மட்டுமல்ல எங்களை நம்பியிருப்போரும்தான்.
எங்கள் நாட்டில் படித்தபடிப்புக்கு வேலைகிடைப்பது அரிது அப்படித்தான் வேலை கிடைத்தாலும் அதற்குரிய சரியான சம்பளமும் கிடைப்பதில்லை அதனால்த்தான் வெளிநாடுகளில் வேலை தேடி வருகின்றோம் இங்குதான் நாம் அவதானமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எமக்கென்று உறவுகள் இங்கு யாரும் இல்லை நண்பர்களைக் கூட நாங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திடிரென நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலையை இழக்க நேரிட்டால் மீண்டும் மற்றுமொரு நிறுவனத்தில் வேலை தேடிப்போகும் போது அங்கே பார்க்கப்படுவது எங்களது திறமை மட்டுமல்ல எங்களது நன்நடத்தை எவ்வாறு இருந்தது கடந்த நிறுவனத்தில் வேலை செய்யும்போது என்பதாகும்.
இச்சம்பவம் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒரு வழிகாட்டி உதாரணமாக அமையும் என நம்புகின்றேன்.

|
No comments:
Post a Comment