Saturday, May 14, 2011

நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.

யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். 

இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: 

மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல்படுகிறது. 
இதற்காக புளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்து கொள்ள வேண்டும். "யாருக்கு போன் செய்ய வேண்டும்" என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இ.இ.ஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் புளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினைத்த எண்ணுக்கு அழைப்பு போகும். 

நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் நினைத்தவுடன் போன் செய்ய முடியும். 

நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு ஜங் கூறினார்

1 comment:

  1. தொழில்நுட்பம் எப்படியெல்லாம் வருது பாருங்க...!!!!!!!!!!

    ReplyDelete