Saturday, May 14, 2011

ஆண்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி

வரப் போகிறது வயாகரா ஆணுறை. இதுதொடர்பான திட்டம் ஒன்றை இங்கிலாந்து பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது திருப்திகரமான, பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு மட்டுமல்லாமல், ஆண்மைக் குறைவு உள்ளோருக்கும் கூட பெரிதும் உதவக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதை டூ இன் ஒன் ஆணுறை என்கிறது அந்த நிறுவனம்.

பெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நடைமுறையில் அது கை கூடாததாகவே உள்ளது. நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்பதை ஆண்களில் பெரும்பாலானோர் விரும்பினாலும் கூட அது பெரும்பாலானோருக்கு அமைவதில்லை.

அதை விட முக்கியமாக ஆணுறை அணிந்து கொள்ளும் பலருக்கும் அது சவுகரியத்தை விட அசவுகரியத்தையே அதிகம் கொடுக்கிறது. அதாவது உராய்வு என்பது அதில் இல்லை, எனவே உறவு திருப்திகரமாக இல்லை என்பதே ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துவோரின் கருத்தாக உள்ளது.
தற்போது மார்க்கெட்டில் உள்ள வயாகரா மாத்திரைகளால் முழுப் பயன் கிடைப்பதில்லை என்பது உறுப்பு எழுச்சிக் குறைவு உள்ள பலரின் குறைபாடாக உள்ளது. மேலும் ஆண்மைக் குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த மனக்குமுறல் உண்டு. ஆனால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள வயாகரா ஆணுறை இந்தக் குறைகளைத் தீர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் வழக்கமான ஆணுறைகளை பயன்படுத்தும்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இதில் இருக்காது என்கிறார்கள் அந்த இங்கிலாந்து நிறுவனத்தினர்.

இதயத்திற்கு ரத்தம் போகாமல் இருக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்தைத்தான் இந்த வயாகரா ஆணுறையில் ஜெல் வடிவில் தடவியிருக்கிறார்கள். அதாவது ரத்தம் ஆணுறுப்புக்கு அதிக அளவில் பாய்வதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் உறவின்போது உறுப்பு எழுச்சி சிறப்பாக இருக்கும். நீடித்த உறவுக்கும் இது வழி செய்கிறது.

இந்த ஆணுறையை சோதனை முறையில் சில ஆண்களிடம் கொடுத்து ஆய்வு மேற்கொண்டபோது அவர்கள் வழக்கமான நாட்களை விட மிகச் சிறப்பான உறுப்பு எழுச்சியையும், உறவையும் மேற்கொண்டதாக தெரிவித்தனர். மேலும் வழக்கமான ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வுத்தன்மை குறைவுப் பிரச்சினையை தாங்கள் இந்த ஆணுறையைப் பயன்படுத்தியபோது சந்திக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆணுறை நழுவிப் போய் விடுமோ என்ற அச்சமும் இதை அணிந்தபோது அவர்களுக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு பொருத்தமானதாக, திருப்திகரமானதாக இது இருந்ததாம்.

ஆண்களுக்கு இது நிச்சயம் சந்தோஷமான செய்திதான்!

No comments:

Post a Comment