டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ராணா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது.
படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளில் நடித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படபிடிப்பு குழுவினர் அவரை உடனடியாக மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர். கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையறிந்ததும் ரசிகர்கள் இசபெல்லா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா உள்பட அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
|
No comments:
Post a Comment