விண்டோசில் உள்ள மேசைத்தளம் தேடுபொறியை (Windows Desktop Search) எப்படி நமது தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவது என்பது குறித்த பதிவு.
குறிப்பிட்ட வகை கோப்புகளை தேடுவது:
ext:ppt sales (கோப்புகளை தேட)
ext:ppt filename:sales (கோப்பின் பெயரினை மட்டும் தேட)
ext:doc date:this week (இந்த வாரம் மாற்றிய கோப்புகள் )
date:13-09-2010..24-09-2010 (இந்த தேதிகளுக்குள் மாற்றிய கோப்புகள் )
kind:pictures date:>23-09-2010 (இந்த தேதியில் எடுத்த படங்கள்)
கோப்புகளின் அளவை வைத்து தேட:
size:gigantic kind:video (மிகப்பெரிய நிகழ்படங்கள் )
size:>500MB ( 500 MB மேல் அளவுடைய கோப்புகள் )
குறிப்பிட்ட போல்டரை தேட:
todo folder:documents (உங்கள் மை டாகுமன்ட்ஸ் போல்டரை தேட)
folder:desktop ext:pdf date:today (இன்று சேமித்த pdf கோப்புகள் )
மின்னஞ்சல்களை தேட(Outlook,Windows Mail):
from:albert date:this week (ஆல்பர்டிடம் இருந்து இந்த வாரம் வந்த மின்னஞ்சல்கள்)
isread:false importance:high (இன்னும் படிக்காத முக்கியமான மின்னஞ்சல்கள்)
hasattachment:true size:>5mb ( 5MB மேல் அளவுடைய மின்னஞ்சல் இணைப்புகள் )
subject:”credit card” from:bank.com (கடன்அட்டை தொடர்பான மின்னஞ்சல்கள் )
இவை சில தான்
ஒட்டுமொத்த அட்டவணையை பார்க்க இங்கே செல்லவும்
|
No comments:
Post a Comment