Friday, April 29, 2011

இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவடையும்! அதிர்ச்சித் தகவல்



உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற உயரிய இடத்தினை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது.
2016-ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் (International Monitory Fund) மதிப்பிட்டுள்ளது.
2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார்.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது.
சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ளனர். ஆசிய நாடான சீனா அமெரிக்காவைக் காட்டிலும் தனி மனித உற்பத்தியில் பின்தங்கியே உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.
2009ம் ஆண்டில் சர்வதேச நிதிய மதிப்பீட்டின் படி அமெரிக்க தனிநபருக்கு உள்நாட்டு உற்பத்தியில் 28 ஆயிரம் பவுண்ட் ஆக இருந்தது. ஆனால் சீன தனிநபர் உள்நாட்டு தயாரிப்பு 2500 பவுண்ட் ஆக இருந்தது.
சீனா விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாணய மதிப்பை நிலைநிறுத்தி உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை சீனா மிஞ்சும் போது அதன் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா அடிபணியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment