இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இதுவரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .இணையதள முகவரி:
http://www.friends2support.org/
இத்தளதிற்கு சென்று என்ன ரத்தப் பிரிவு தேவை என்பதையும்,இந்தியாவில் எந்த எந்த மாநிலத்தில்,எந்த மாவட்டத்தில்,எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்தல் போதும்.உங்கள் மாவட்டத்தில் ரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு ரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம்.
5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு ரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான்.ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுபினராக பதிந்து கொள்ளலாம்
.எங்கோ கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கு அரிய வகை ரத்தம் தேவைபடும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகபடுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும்.
உதவுங்கள் முகம் தெரியாத நண்பர்களுக்கு.
|
No comments:
Post a Comment