ரஜினி வாக்கு தவறாதவர் என்பதுதான் அவரது ரசிகர்களுக்கு தெரிந்த மேலோட்டமான உண்மை. ஆனால் ரஜினி மட்டுமல்ல, ரஜினியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வாக்குக் கொடுத்தால் அதை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் உதாரணமாகி இருக்கின்றன.
முதல் சம்பவம் :
சமீபத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒன்றினைந்து ஒருகோடி செலவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியின் 62-வது பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவும் அவரது கணவர் அஸ்வினும் கலந்து கொள்வதாக விழாக்குழுவுக்கு வாக்களித்தார்களாம். ஆனால் ரஜினி வீட்டு பணியாள் கூட விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மாறாக திரையுலகில் இருந்து பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய கருணாஸ், பகிரங்கமாக “ இந்த விழாவுக்கு ரஜினி சார்பில் ஒருவர் கூட வராதது.அவரது ரசிகர்களை அவமதிக்கும் செயல்” என்று கடுமையாகச் சாடினார்.
இதற்கு அங்கே திரண்டிருந்த மொத்த ரஜினி ரசிகர்களும் கைதட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதை மட்டுமல்ல தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு விருந்தளிப்பதாகக் கூறி ரஜினி ஏமாற்றியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை என்று காட்டமாகவே கூறினார்கள் சென்னையைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும்!
இரண்டாவது சம்பவம்:
ஒரு படத்தின் ‘டைட்டில்’ சம்பந்தபட்டது. கடந்த வாரம் ரஜினியிடமிருந்து தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு, திடீரென ஒரு கடிதம் வந்தது. ‘பெருமான்- தி ரஜினிகாந்த்’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்படுவதை தாம் சமீபத்தில்தான் கேள்விப்பட்டதாகவும்,கடவுளோடு தன்னை ஒப்பிடும் அந்த டைட்டிலை உடனே தடை செய்யவேண்டும் என்றும் அந்தக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி.
அவரது வேண்டுகோள், சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பாளரான பிருந்தா தாஸுக்கு உடனே தெரிவிக்கப்பட்டு, ரஜினியின் விருப்பப்படி தலைப்பும் முடக்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் ராஜேஷ், ரஜினியின் இந்த திடீர் முடிவு தனக்கு மிகவும் ஆச்சரியமளிப்பதாகக் கூறுகிறார்.
உடல்நலம் குன்றி ரஜினி மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு முன்பே அவரை நேரில் சந்தித்து, சம்மதமும், ஆசியும் வாங்கிய பிறகுதான் படத்தையே ஆரம்பித்தோம். ரஜினியின் இடத்தை வேறொரு துறையில் அடைய விரும்பும் இளைஞனின் கதை இது.படம் ரிலீஸை நெருங்கும் வேலையில் ரஜினியின் இந்த திடீர் பல்டியை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று சோககீதம் இசைக்கிறார் ராஜேஷ்.
|
No comments:
Post a Comment