சேலம் மாவட்டம், எடப்பாடி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சி கொத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்முருகேசன். இவருக்கு வயது 32. ஜே.சி.பி வாகனத்தின் ஓட்டுனரான இவருக்கும் இதே ஊரில் உள்ள சின்னத்தாயி என்பவரின் மகள் பரிமளா (வயது 19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு கலாநிதி என்ற ஒருவயது ஆண் குழந்தையும் உள்ளது. மனைவியை பிரசவத்துக்கு தாயார் வீட்டுக்கு அனுப்பிய முருகேசன், மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த ஒரு வருடமாக அங்கேயே விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள் அன்று உள்ளூரை சேர்ந்த மணி என்பவர் முருகேசனை கூட்டிக்கொண்டு சின்னத்தாயி வீட்டுக்கு சென்று பரிமளாவை முருகேசனோடு அனுப்பிவையுங்கள் அவர்கள் போய் குடும்பம் நடத்தட்டும் என்று சொல்லியுள்ளார்.
அப்போது மாமியார் சின்னத்தாயிக்கும், மருமகன் முருகேசனுக்கும் வாக்குவாதம் தொடங்கி அது சண்டையாக மாறிவிட்டது. முருகேசனின் மாமியார் சின்னத்தாயும், மாமனார் சன்முகநாதனும் சேர்ந்து முருகேசனை அடித்துள்ளனர். மாமியார் சின்னத்தாயி, மருமகன் முருகேசனை கீழே தள்ளி அவரின் பிறப்பு உறுப்பின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த தாக்குதலில் முருகேசன் பிறப்பு உறுப்பில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கிவிழுந்த முருகேசனை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மணி. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசனுக்கு அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பில் தையல் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருமகன் தாக்கியதாக கூறி மாமியார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
மருமகன் கொடுத்த புகாரின் பேரில் மாமியார் சின்னத்தாயி மீதும், மாமியார் கொடுத்த புகாரின் பேரில் மருமகன் முருகேசன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் எடப்பாடி போலீசார். இந்நிலையில், முருகேசனின் உறவினர்கள் நேற்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துசாமியை சந்தித்து கொடூரமாக நடந்து கொண்ட சின்னத்தாயி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், முருகேசனின் தாயார் ஆராயி, சகோதரர் ராமநாதன், சகோதரி அம்மாசி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.
முருகேசன் மீது எவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக, அவர் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த உள்ளாடையை (ஜட்டி) எடுத்து வந்து ஆராயி கண்காணிப்பாளரிடம் காட்டினார். மருமகன் முருகேசன் மீது மோகம் கொண்ட மாமியார் சின்னத்தாயி அவரை, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார் என்றும், அதற்கு முருகேசன் உடன்படாத காரணத்தால் தான் பிரசவத்துக்கு போன மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பாமல் தன்னுடைய வீட்டிலேயே வைத்துக்கொண்டார் என்றும் மாமியார் சின்னத்தாயி மீது புகார் கூறினார்கள் முருகேசனின் உறவினர்கள்.
|
No comments:
Post a Comment