Sunday, December 18, 2011

படிக்கும் பெண்களே உஷார்????

சென்னை நுங்கம் பாக்கம் அப்போலோ மருத்துவமனை அருகில் இஸ்லாமிய தேசிய தொண்டு இயக்கம் ஒன்றை சேர்ந்த அமிஞ்சிக்கரை கிளை நிர்வாகி ஹபிப் எனும் சகோதரர் தன்னுடைய எலக்ட்ரானிக் பொருள் வியாபாரத்திற்காக நின்று கொண்டிருந்த போது ஒரு ஜீன்ஸ்,டி சர்ட், தலையில் ஸ்கார்ப் அணிந்த ஒரு இளம் பெண் அங்கே இருந்த வீடுகளைத் தட்டி 'தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும், தான் தங்க இன்று இரவு மட்டும் அனுமதி தருமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்தப் பெண்ணைக் கண்ட இந்த சகோதரர் விபரீதத்தை உணர்ந்தார். யாராவது அடைக்கலம் தருகிறேன் என்று அழைத்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து விட்டால்... ஏன் எனில் அந்தப் பெண் வீடு எனத் தட்டியது எல்லாம் நாள் வாடகைக்கு தங்கும் சேவை வீடுகள் [serviced apartments] என்பது அங்கு வியாபாரத்திற்காக சென்ற ஹபிபுக்கு தெரியும் ! விபரிதத்தை உணர்ந்த ஹபிப் அந்தப் பெண்ணை அணுகி யார் என்ன என்று விசாரித்த போது தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும் , தன் தோழியைத் தேடி வந்ததில் அவர் இல்லை என்பதால் காலை பிருந்தாவன் செல்லும் வரை தங்க ஏற்பாடு செய்து தருமாறும் கூறினார்.உடனே ஹபிப் சூளை மேடு அல்புர்கான் நிர்வாகியும் அங்கு மதரசாவின் மேல் தளத்தில் குடும்பத்தோடு தங்கியருக்கும் அந்த தொண்டு இயக்கத்தின் சகோதரர் இப்ராகிம் வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு அவருக்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளின் மனைவிகள் சந்தித்து இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது ' வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை திணிக்காதீர்கள்' என பேசினார் தன் தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்தவர் அவர் கொல்கத்தாவில் உள்ளார், தான் டிஸ்கோத்தே கிளப்பில் டிஜே ஆக இருந்துள்ளேன்! என்று கூறினார்.மறுநாள் பெங்களூரும் செல்லவில்லை.எனது தோழி வந்து விடுவர் என்னை இரண்டு நாள் தங்க அனுமதியுங்கள்.என்று சொல்லி இழுத்தார்.

மிகவும் நெருக்கிப் பிடித்து கேட்கும் போது, தான் சிவா எனும் நேபாள இளைங்கனை காதலிப்பதாகவும் அவனை நம்பி வீட்டை விட்டு வந்ததாகவும் கூறியதை அடுத்து, அவன் மொபைல் எண்ணை வாங்கிப் பேசியதில் அவன் வெளிநாட்டு சட்டை கம்பெனியில் பணி புரிவதாக சொன்னதை அடுத்து இந்தப் பெண்ணை அங்கு அழைத்து சென்று பார்த்ததில் அவன் அங்கு இல்லை ! காதலிப்பதாக சொன்ன நேபாளத் தம்பி நீட்டினான் கம்பி!

பொய்யான பெயர் கொடுத்ததால் அப்படி யாரும் இல்லை என்று அறிந்து கொண்டனர். அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள். அடுத்து என்ன செய்வது என மாநில துணை போது செயலாளர் இக்பால் அவர்களிடம் தொடர்பு கொள்ள அவர் அப்பெண்ணை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொன்னார்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்றால் அங்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளைக் காணாமல் புகார் கொடுக்க வந்திருந்தனர்.அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள்.பெங்களூர் கல்கத்தா, தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்டியன் என்பதெல்லாம் புருடா. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் செலவ செழிப்புள்ள சிறந்த குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் இருவரும் ஹஜ்ஜுக்கு சென்று அன்று தன் திரும்புகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த பெண் இந்த வேலை செய்துள்ளார்.

அந்தப் பெற்றோர் மிகுந்த வேதனையுடன் மகளை கண்டித்தனர்.

தன்னுடைய மகளை ஆர்க்கிடெக்ட் படிக்க வைத்த பெற்றோர் பெண்ணுக்கு அளித்த சுதந்தரத்தை எண்ணி வருந்தினர்.

இருப்பினும் தன் மகள் தவறானவர்களின் கையில் சிக்கி சீரழியாமல் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள் மூலம் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்.

மேலும் மறு நாள் தன் மகளை மூன்று நாள் கண்ணியத்துடன் காத்த அல்புர்கான் மதரசாவுக்கு குடும்பத்தோடு நேரில் வந்து நிர்வாகிகளிடம் மதரசா நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கு கட்டுபாடற்ற சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள் இனியனும் சிந்திக்கட்டும்.

இஸ்லாமிய அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கட்டும். ஏன் எனில் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகி ஹபிப் அல்லாமல் வேறு யார் இடமாவது சிக்கியிருந்தால் என்னாகும் என்று சிந்தித்து பார்க்க முடியவில்லை.

வீட்டை விட்டு ஓடிப் போகும் பெண்கள் இனியேனும் திருந்தட்டும.

No comments:

Post a Comment