
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது.
இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.
|
No comments:
Post a Comment