Sunday, December 18, 2011

படிக்க வந்த மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்! - புதுச்சேரி அருகே சம்பவம்!!


புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதியில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம்பெண், 3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஏரியல் சுவக்ஸ். இவரது மகள் வெரோனிக்கா,25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சுற்றுச்சூழல் குறித்த படிப்பிற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் இந்தியா வந்து, மொரட்டாண்டி அருகே சதானந்தா கார்டனில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வெரோனிக்கா, தனது வீட்டின் அருகே சாலையில் ஜாக்கிங் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து, அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட வெரோனிக்கா, மயக்கம் தெளிந்து வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பெற்றோர் அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு, சம்பவம் நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, போலீசாரிடம் விபரம் கேட்டறிந்தார்.

கொலை,கொள்ளை சம்பவங்கள்:

சர்வதேச நகரமான ஆரோவில்லில் ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சிலர் அங்கேயே தங்கி வேலையும் செய்கின்றனர்.

இப்பகுதியில் செல்லும் அவர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் கிடையாது. குறிப்பாக, ஆரோவில் செல்லும் முக்கிய சாலையான இடையஞ்சாவடியில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இங்கு தெரு விளக்குகள் இல்லாததால், பொதுமக்கள் இச்சாலையை பயத்துடன் கடந்து செல்கின்றனர்.

இங்கு தான் தொழிலதிபர் ஆந்திரே கொலை, கள்ளக்காதல் பிரச்னையில் பெண் எரித்துக் கொலை, சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வாலிபர் எரித்துக் கொலை போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

No comments:

Post a Comment