முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகுப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப்டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம்.
புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பில் பல புதிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். அனைத்து வசதிகள் குறித்தும் நீங்கள் அறிய வேண்டும் என்றால், http://www.beautyoftheweb.com/#/ new_in_rc என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைக் காணவும்.
1.முதலாவதாக, உங்கள் மனதில் எழும் கேள்வி - இதனை நான் என் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்க்க வேண்டுமா என்பதுதான். நிச்சயமாக. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தாலும், இதில் உள்ள வசதிகள் குறித்து அறிய, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். இது மிக மிக பாதுகாப்பான ஒரு பிரவுசராகும்.
2. இயங்கும் செயல்திறன் வேகம் கூட்டப்பட்டுள்ளது:இந்த வகையில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜிமெயில் போன்ற அதிக தகவல்களைக் கொண்டுள்ள ஓர் இணைய தளத்துடன் பிரவுசர் இயங்குகையில் இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்ற வகையில் திறன் கூட்டப்பட்டுள்ளது.
3. மின் சக்தி பயன்பாட்டினை வரையறை செய்தல்:அனைத்து பிரவுசர்களும் இப்போது ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது சி.பி.யு வின் சக்தியை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த பயன்பாடு இப்போது பவர் செட்டிங்ஸ் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டரியில் நீங்கள் பிரவுசரை இயக்குகையில், சிபியுவின் சக்தி குறைவாகவே பயன்படுத்தும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியின் திறன் வீணாவது தடுக்கப்படுகிறது. இது உண்மையிலேயே புதியதொரு மாற்றம் தான்.
4. யூசர் இன்டர்பேஸ் மாற்றங்கள்: பயனாளருக்கும் பிரவுசருக்குமான இடைமுகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டேப் பாரினை, அட்ரஸ் பாருக்குக் கீழாக அமைக்கலாம். முன்பு அனைத்தும் ஒரே வரிசைய்ல் இருந்ததனால், டேப்கள் மிகவும் சிறிய பட்டன்களாக இருந்தன. இப்போது, டேப் பாரில் ரைட் கிளிக் செய்தால், அது தனி வரிசையாக இடம்பெறுகிறது. இரண்டு வரிசையாக இவை இடம் பெற்றாலும், மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த இடமே எடுத்துக் கொள்கின்றன. பிக்ஸெல்பவர் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெனு பாரினை உடனுடக்குடன் தேவைப்படும்போது தெரியும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம்; மறைத்துக் கொள்ளலாம்.
5. பின் செய்யப்படும் தளங்கள்: டாஸ்க் பாரில் ஒரு பட்டனில், எத்தனை தளங்களை வேண்டுமானாலும் இருத்தி வைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் மொத்தமாக சேர்த்துத் திறந்து பார்க்க விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை ஒரே கிளிக் மூலம் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.
6. பிளாஷ் மற்றும் விளம்பர தடை: இதில் புதிய ஆக்டிவ் எக்ஸ் பில்டரிங் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஷ் இயக்கம் மற்றும் விளம்பர தடைகள் இணைந்து தரப்பட்டுள்ளன. நீங்கள் பாதுகாப்பானது என நம்பும் தளங்களுக்கு மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இயக்குமாறு செய்திடலாம். மேலும் விளம்பரங்கள், அவற்றின் தன்மை உணரப்பட்டு தடை செய்யப்படுகின்றன.
7. இயங்கும் இடம் அறிதல்: தங்களைப் பற்றிய எந்த தனி தகவலும் வெளியாகக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கு இந்த வசதி எரிச்சல் ஊட்டுவதாய் அமையும். ஆனால் இதில் சில குறிப்பிடத்தக்க வசதிகளும் உள்ளன. நீங்கள் பயணத்தில் இருக்கையில், லேப்டாப் பயன்படுத்து பவராக இருந்தால், சில இடங்கள் குறித்து அறிந்து கொள்ள இது உதவும். குறிப்பாக, கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகையில் இதன் செயல்பாடு நம் இணையப் பயன்பாட்டினை அர்த்தமுள்ளதாக அமைக்கும். ஆனால் இது குறித்து கவலைப்படவும் தேவையில்லை. நம் தனி நபர் தகவல்களை வெளியே விடாத வகையில் இதனை செட் செய்திடலாம்.
8. வெப் எம் வீடியோ: கூகுள் அண்மையில் தன் குரோம் பிரவுசரிலிருந்து எச். 264 வீடியோ தன்மையை எடுத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், கூகுள் நிறுவனத்தின் வெப் எம் (WebM) வீடியோ பார்மட்டினை இணைத்துள்ளது.
இந்த வசதிகள் குறித்து படித்தறிகையில் பல வாசகர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது குறித்துப் பல சந்தேகங்கள் எழலாம். அவற்றில் சில கீழே தீர்க்கப்பட்டுள்ளன.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குமா?
இயங்காது.
2. ஏற்கனவே ஒரு சோதனைத் தொகுப்பு ஒன்றைப் பதிந்து இயக்கி வருகிறேன். புதிய தொகுப்பினை, அதனை அழித்துவிட்டுப் பதிய வேண்டுமா? அதன் மேலாகவே பதியலாமா? அல்லது கூடுதலாகத் தனியே, வேறுஒரு ட்ரைவில் பதியலாமா?
பழைய சோதனைப் பதிப்பின் மேலேயே பதிந்து இயக்கலாம்.
3. விண்டோஸ் இயக்கத்தில் 32/64/128 பிட் இயக்கங்கள் என வேறுபட்ட இயக்கத் தொகுப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 உள்ளதா?
உங்களுடைய விண்டோஸ் இயக்கம் எத்தனை பிட் இயக்கம் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பிரவுசர் பதிப்பினையே பதிந்து இயக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 32 பிட் பதிப்பு இருந்தால், விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 32 மட்டுமே பதிந்து இயக்க வேண்டும். http://www.beaut yoftheweb.com/#/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால், உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பதியலாம்

|
No comments:
Post a Comment