கூகுள் குரோம் வெப் பிரவுசர் தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஓர் அழகிய அற்புத சேவையை வழங்கி உள்ளது. Webstore என்னும் பெயரில். இந்த சேவையின் நோக்கம் என்ன என்றால், ஓர் பிரவுசர்கான அனைத்து சிறப்பு சேவைகளையும் மொத்தமாக உள்ளடக்கிய ஓர் தொகுப்பை மக்களிடையே வழங்குவது தான்.
தாங்கள் இந்த என்பதில் நுழைந்தவுடனே இதன் அருமை தங்களுக்கு விளங்கிவிடும். இங்கு உள்ள அனைத்து சேவைகளும் இலவசமே!
இந்த வெப் ஸ்டோரில் பல வகையான அழகிய, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பல வகையான கூகுள் குரோமிற்கான தீம்ஸ்கள் உள்ளன.
மேலும் பல வகையான APPLICATIONSகள் உள்ளன. தங்களின் விருப்பமான APPLICATIONSகளை தாங்கள் நேரடியாக செல்லாமல் இங்கு இருந்தே பயன்படுத்தலாம்.
பல வகையான Extension Toolsகளும் உள்ளன. அதாவது இவற்றை பயன்படுத்தி பல பயனுள்ள செயல்களை மேற்கொள்ளலாம். உதரணமாக திரையில் தோன்றும் படத்தை சில வினாடிகளில் நமது கணினியில் பதிவிறக்கிகொள்ளலாம்.
இந்த சேவையை பெற தாங்கள் புதிய பதிவை பதிவிறக்க வேண்டும். அல்லது கீழே உள்ள குறிப்பை கிளிக் செய்வதன் மூலமும் சேவையை பெறலாம்.
Download>> Chrome New Or Go To Webstore
Download>> Chrome New Or Go To Webstore
கூகுள் வெப் ஸ்டோரை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை காணவும்.
நண்பர்களே! சில வாரங்கள் என்னால் தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் போனது. மன்னிக்கவும். எனக்கு தேர்வு நடப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.
தாங்கள் இந்த சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு தங்களின் கருத்துகளை தெரிவிங்கள். நன்றி!
|
No comments:
Post a Comment