Saturday, March 19, 2011

ஆன்லைனில் அன்றாட வாழ்க்கை!

உலகம் மாறிவருகிறது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக்கப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்கவும் இனிமையாக்கவும் ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளும் டிஜிட்டல் மயமாகி அன்றாட வாழ்க்கையினை இன்று கம்ப்யூட்டர் வழியாகவே நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பரபரப்பு மிகுந்த இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு இது பெரிய உதவியாகவே உள்ளது. 


நகரங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்த டிஜிட்டல் வசதிகள் இன்று சிறிய ஊர்களிலும் பழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்டன. விமானப் பயணங்களில் தொடங்கி இன்று ட்ரெயின் டிக்கட், ஆம்னி பஸ் டிக்கட் என பயணங்களை எளிதாக்கும் வகையில் ஆன்லைனில் டிக்கட் எடுப்பது அவற்றை மாற்றி அமைப்பது, கேன்சல் செய்வது என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இருந்த இடத்திலிருந்தே ஸ்டாக் மார்க்கட்டை கலக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் மேலோங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கிப் பதுக்கி விற்பனை செய்வதுவும் நடக்கிறது. ரூ.200க்கு மேல் பிரியாணி வேண்டுமா எங்கள் இன்டர்நெட் தளத்தில் ஆர்டர் செய்திடுங்கள் என்று விளம்பரம் செய்திடும் அளவிற்கு இந்த ஆன்லைன் வாழ்க்கை முன்னேறி விட்டது. இவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.. 


1. ஆன்லைன் பேங்கிங்: அனைத்து வங்கிகளும் கோர் பேங்கிங் மற்றும் அதன் அடிப்படையில் இன்டர்நெட் பேங்கிங் என்ற முறைக்கு வந்துவிட்டன. எந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வசதியை விண்ணப்பம் அளித்துப் பெறலாம். உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை இந்த வங்கிகள் அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்கு பாதுகாப்பான முறையில் பெரும்பாலும் கூரியர் மூலம் அனுப்புகின்றன. வீட்டிலோ அல்லது வெளியே இன்டர்நெட் மையங்கள் மூலமாக இந்த வங்கியின் இணையதளம் சென்று உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளலாம். 

பெரும்பாலும் நம் அக்கவுண்ட்டில் இன்றைய பேலன்ஸ் எவ்வளவு, சம்பளம் கணக்கில் சேர்ந்துவிட்டதா என்று நிறைய பேர் உறுதி செய்து கொள்கின்றனர். கிளைக்குச் சென்று அங்கு நம் வண்டியை நிறுத்த இடமில்லாமல் அலைந்து பின் உள்ளே வரிசையில் நின்று பாஸ்புக் என்ட்ரி, செக் பரிமாற்றம் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர், டிமாண்ட் டிராப்ட் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி விண்ணப்பம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பில் செலுத்துதல் என அனைத்து பேங்கிங் பணிகளையும் இன்டர்நெட் வழியாக எந்த ஊரில் இருந்தும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இதனால் நம் நேரம், உடல் உழைப்பு, அலைச்சல் மிச்சமாகிறது. அத்துடன் பண பரிமாற்றம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படை யாகவும் நடைபெறுகிறது. 


2. ட்ரெயின் டிக்கட்: இந்தியாவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு செயல்படும் இன்டர்நெட் தளமாக இந்திய ரயில்வேயின் இணையதளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் எளிமையும் பயன்படுத்து பவர்களுக்கு வசதியையும் அளிப்பதுதான். www.irctc.co.in மற்றும் www.srailway.com என்ற இந்த இணைய தளங்களின் மூலம் இன்று நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயனடைகின்றனர். உங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் இந்த டிக்கட்களை எளிதாகப் பெறலாம். ஐ–டிக்கட் (வீடுகளுக்கே அனுப்பப்படும்) இ–டிக்கட் (நீங்களே பிரிண்ட் செய்து எடுத்துச் சென்று பயணம் மேற்கொள்வது) சீசன் டிக்கட் மற்றும் தட்கல் வழியில் டிக்கட் என அனைத்தும் கிடைக்கின்றன. எந்த வண்டியில் எந்த நாளில் இடம் உள்ளது என முதலில் உறுதி செய்து கொண்டு பின் டிக்கட் புக் செய்யலாம். குறிப்பிட்ட ட்ரெயின் என்பது மட்டுமின்றி குறிப்பிட்ட இரு ஊர்களுக்கிடையே எந்த ட்ரெயின்களெல்லாம் செல்கின்றன; 


அவற்றில் என்று எத்தனை இடங்கள் உள்ளன என்று பார்த்து உறுதி செய்து டிக்கட் புக் செய்யலாம். வேண்டாத போது டிக்கட்டை கேன்சல் செய்திடலாம். கேன்சல் செய்திட அருகில் உள்ள புக்கிங் மையத்திற்குச் செல்ல வேண்டும். பணம் உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். ரயில்வே தளத்தில் தகவல்களை அறிய ஸ்டேஷன் கோட் எண், ட்ரெயின் எண் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இல்லை யேல் தளத்திலேயே பெறலாம். இந்த வசதிகளை ரீடிப் தளம் தனிப்பட்ட முறையில் தருகிறது. தகவல்களை மட்டும் பெற நீங்கள் http://indianrailways.rediff.com/ index.php என்ற தளத்தினை அணுகலாம். 



இங்கு ஊர் பெயர் டைப் செய்திடத் தொடங்கினால் போதும். தளத்தில் அந்த எழுத்துக்களின் தொடங்கும் அனைத்து ஊர்களின் பெயர் கிடைக்கும். இதே போல பயண நாளையும் எளிதாக அமைக்கலாம். பின் இந்த தளம் இந்தியன் ரயில்வே தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று விளக்கமாக அளிக்கிறது. ரயில்வே தளத்தில் உடனடியாகப் பெற முடியாத தகவல்களை ஒரே முயற்சியில் இங்கு பெறலாம். ஆனால் டிக்கட் பதிவிற்கு ரயில்வே தளத்திற்குத் தான் செல்ல வேண்டும். இதே போல சில ஆம்னி பஸ் நிறுவனங்களும் தங்கள் இணைய தளங்கள் மூலம் பஸ்களுக்கான டிக்கட்களை வழங்குகின்றன. பஸ்களில் இடம் இருக்கிறதா என்ற தகவல்களைத் தருகின்றன. அவற்றைப் பெற்று போன், இமெயில் மூலம் டிக்கட் புக்கிங் செய்திடலாம். 


3. பாஸ்போர்ட் பெற: வெளிநாடு செல்லத் தேவையான முதல் டாகுமெண்ட் நமக்கான பாஸ் போர்ட் தான். இதற்கான அலு வலகம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரிரு இடங்களில் தான் உள்ளன. எனவே இங்கு சென்று விண்ணப் பிப்பது காலத்தை வீணாக்கும் செயல். இன்று ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்வதனைக் கட்டாயமாக்கி உள்ளனர். http://passport.nic.in/ என்ற தளம் இதற்கு உதவுகிறது. இதே போல வெளிநாடு செல்ல அந்த நாட்டின் தூதர் அலுவலகங்கள் விசா வழங்கும் பணியையும் இணைய தளங்கள் வழியாக மேற்கொள் கின்றன. அல்லது இதற்கென்றே இயங்கும் ஏஜென்சிகள் தங்கள் இணைய தளங்கள் வழியாக அனைத்து நாடுகளுக்குமான விசாக்களை ஏற்பாடு செய்கின்றன. 

4.திரைப்படத்திற்கானடிக் கட்கள்: சென்னை போன்ற நகரங்களில் வளாகங்களை அமைத்து பல தியேட்டர்களை ஒரே இடத்தில் நடத்தி வரும் தியேட்டர் நிறுவனங்கள் இணைய தளங்கள் வழியாக டிக்கட் புக்கிங் மேற்கொள்கின்றன. நாள், ஷோ நேரம், வளாகத்தில் உள்ள தியேட்டர், படம் முதலானவற் றைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய டிக்கட்களை பதிவு செய்திடலாம். வீட்டிற்கு டிக்கட்கள் டெலிவரி செய்யப் படும். இதற்கு தனி கட்டணம் உண்டு. 


5. கம்ப்யூட்டர் வாங்கலாம்: டெல் நிறுவனம் உலகளாவிய அளவில் ஆன்லைனில் கம்ப்யூட்டர் விற்பனை செய்கிறது. இதன் இணைய தளம் சென்று (http://dellstoreroa02.sg.dell.com/ public /cart/configurator.jsp?prd_id=42488&sr_no=2) நமக்கு வேண்டிய வகையில் கம்ப்யூட்டர் கான் பிகரேஷன் ஏற்படுத்தி புக் செய்திடலாம். 


6.கூரியர்தபால்: வெளிநாடு களுக்கு விலை உயர்ந்த பொருட்களை, டாகுமெண்ட்களை கூரியர் ஏஜென்சி மூலம் அனுப்புகிறீர்கள். அது எங்கு உள்ளது? சென்றடைந்துவிட்டதா? என்றெல்லாம்கவலைப் படுகி றீர்களா? பெட் எக்ஸ் மற்றும் புளுடார்ட் போன்ற கூரியர் நிறுவனங்கள் உங்கள் பார்சல் அல்லது தபால் தற்போது எங்கிருக்கிறது என்பதனை தங்கள் இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியினை அளிக்கின்றன. 


7. கார்ப்பரேஷன் வரி செலுத்துதல்: சொத்து வரி, தண்ணீர் வரி, பிறப்பு மற்றும் மரணச் சான்றிதழ் எனப் பல விஷயங்களை நாம் அவ்வப்போது கையாள வேண்டியதுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிகள் இவை குறித்த தகவல்களை அளிக்கின்றன. இணையம் வழியாக வரி வசூலிக்கும் வசதியை விரைவில் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளன. 


8. மொபைல் ரீசார்ஜ் கூப்பன்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிரீபெய்ட் மொபைல் போன்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறது. உடனே உங்கள் மொபைல் போன் அக்கவுண்ட்டில் இருக்கும் டாக் டைம் வேல்யூ உயர்கிறது. உங்கள் அக்கவுண்ட் பெயர், ஐ.டி. கொடுத்து தளத்தில் நுழைந்து பின் உங்கள் மொபைல் போன் சர்வீஸ் மற்றும் எண் கொடுக்க வேண்டும். பின்னர் எவ்வளவு உயர்த்த வேண்டும் எனக் கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் மொபைல் போன் பிரீ பெய்ட் அக்கவுண்ட்டின் டாக் வேல்யூ உயர்ந்திருப்பதைக் காணலாம். தனித்தனி நிறுவனங்களின் இணைய தளம் மட்டுமின்றி இத்தகைய சேவைகளை வழங்க பொதுவான தளங்கள் இருக் கின்றன. இவை கட்டணம் ஏதும் பெறாமல் உங்கள் பயண டிக்கட், சினிமா டிக்கட், பொருட்கள் சப்ளை ஆகியவற்றை பெற்றுத் தருகின்றன. இதற்கான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளன. அவை இந்த வர்த்தகத்திற்கான கமிஷனை இந்த இணைய தள நிறுவனங்களுக்குத் தருகின்றன. கூகுள் சர்ச் இஞ்சினின் தேடல் தளத்திற்குச் சென்றால் இத்தகைய தளங்களின் பட்டிய லைக் காணலாம். 


இவ்வளவு வசதிகள் இருந்தும் இன்னும் பல படித்தவர்கள் இதனைப் பயன்படுத்த முன் வருவ தில்லை. காரணம் ஆங்காங்கே நடக்கும் திருட்டுகள் தான். உண்மை தான்; பல ஏ.டி.எம். மையங்களில் நடப்பது போல இணைய தளங்கள் வழியாக வர்த்தகம் நடைபெறுகையில் நம் கிரெடிட் மற்றும் ஏ.டி. எம். கார்டு குறித்த தகவல்கள் கசிய வாய்ப்புகள் இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி சில திருடர்கள் நம் பணத்தை இழக்கும்வழிகளை மேற் கொள்ளலாம். ஆனால் இது எப்போதும் எல்லா இடத்திலும் நடைபெறுவதில்லை. இது போன்ற இழப்புகள் உடனே சரி செய்யப்படுகின்றன. நஷ்டம் ஈடு கட்டப்படுகின்றன. பொதுவாக நாம் பொருட்களைக் கண்ணால் பார்த்த பின்னரே வாங்க முற்படுவோம். அத்தகைய எண்ணமும் நம்மை இத்தகைய ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடுக்கின்றன. உலகம் மாறி வருகி றது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக் கப்படுகிறது. வாழ்க் கையை எளிதாக்கவும் இனிமை யாக்கவும் இந்த ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. உங்கள் வங்கிக் கணக்குக்கான இன்டர்நெட் அக்கவுண்ட் தொடங் குங்கள் – இலவசமாக. வாழ்க் கையை ஆன்லைனில் அனுபவி யுங்கள். ஒருமுறை இத்தகைய வர்த்தகத்தினை மேற்கொண்டால் பின் அனைத்தும் இவ்வழியிலேயே மேற்கொள்ள முற்படுவீர்கள். மிச்சப்படுத்தும் நேரத்தையும் உழைப்பையும் உங்கள் குடும் பத்திற்காகச் செலவ ழியுங்கள். சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடருங்கள். 

No comments:

Post a Comment