பெற்றோருக்கு கணினிப் பற்றிய தகவல்களை வீடியோவுடன் புரிய
வைக்க கூகுள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
புதுமைகள் செய்வதில் தங்களுக்குள்ளே போட்டி போட்டு கொள்ளும்
கூகுள் நிறுவனத்தில் இருந்து பெற்றொருக்கு கணினி பற்றிய
அடிப்படை பாடத்தை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு
தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கூகுளின் இருந்து வெளிவந்த
தளம் என்ற வார்த்தையை கேட்டதுமே கண்ணை மூடிக்கொண்டு
பல பேர் இதில் சேர்ந்துள்ளனர்.
இணையதள முகவரி : http://www.teachparentstech.org
பெற்றொருக்கு கணினி பற்றி சொல்லிக்கொடுக்க கூட நேரம் இல்லையே
என்று சொல்லும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும். பெற்றொருக்கு இருக்கும் அடிப்படை கேள்விகளில் இருந்து
copy & paste , adjust the time on your clock , change your
desktop background , change your wallpaper (PC) , make text bigger
(or smaller) , take a screenshot, change your screensaver (Mac) ,
change your screensaver (PC) இணையதளம், மீடியா வரை அனைத்து
தகவல்களையும் வீடியோவுடன் சொல்லி எளிதாக புரிய வைக்கிறது.
வெளிவந்த சில நாட்களில் 13723 பேர் இந்ததளத்தின் மூலம் பயன்
அடைந்துள்ளனர் நாமும் நம் பெற்றொருக்கு இந்ததளத்தை அறிமுகப்
படுத்தி அவர்களுக்கு கணினி அறிவை வளர்ப்போம்.
|
No comments:
Post a Comment