நக்கீரன் -தி.மு.க வுக்கு அல்லக்கை னு சொல்லிட்டீங்க...,விகடன்,துக்ளக் -அ.தி.மு.க சொம்புன்னு சொல்லிட்டீங்க....சரி புதிய தலைமுறை இதழ் நம்ம மாலன் சார் ,மற்றும் தி.மு.க வின் டிவிட்டர் ,பஷ் கொள்கை பரப்பு செயலாளர் யுவகிருஷ்ணா பங்களிக்கும் பத்திரிக்கை இது...இவங்க சொல்றதை கூட நம்ப மாட்டீங்களா மக்களே...?
ஆமாங்க....தி.மு.க அதி.மு.க இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிவிக்கும் போது சமபலமாக இருந்தது..ஆனால் தொகுதி பங்கீடு காலகட்டத்த்தில் சில சதவீதம் அதிகம் பெற்று அ.தி.மு.க கூட்டணியே முன்னிலையில் இருப்பதாக இப்பத்திரிக்கை இன்று கருத்து கணிப்பு வெளியுட்டுள்ளது....
தி.மு.க மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்றும்,குடும்ப அங்கத்தினர்களை கட்சிக்குள் நுழைய விட்டதை மக்கள் வெறுப்பதாகவும் ,விலைவாசி உயர்வு 70 சதவீதம் அதிருப்தி நிலையை உருவாக்கி இருப்பதாக சொல்லியிருக்காங்க..
அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதில் கலைஞர் ,ஜெயலலிதா இருவரும் தலா 42 சதவீதம் என்னும் அளவில்..இருப்பதாக குறிப்பிட்டபின்..இதில் அடுத்த முதல்வர் என விஜயகாந்த் க்கு 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க..விஜயகாந்த் ஆதரவும் சேர்ந்தா ஜெயலலிதாதான் அடுத்த தமிழக முதல்வர் என உறுதியா தெரிவிச்சிருக்காங்க...புதிய தலைமுறை வார இதழ் மற்றும் ஏசிநீல்சன் நிறுவனம் இருவரும் இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பில்,80 சதவீத மக்கள்,பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதால் ஓட்டை மாற்றி போடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.....
ஹெட்லைன்ஸ் டுடே ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது அதில் அ.தி.மு.க கூட்டணிக்கு 144 தொகுதிகள் கிடைக்கும் என சொல்கிறது....இங்கு சென்று பாருங்கள்
நியூயார்க் டைம்ஸ் தனது இந்திய மாநில அரசியல் வரிசையில் தமிழக தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போது,,கலைஞர் என்னும் பேராசை மனிதர் தன் தவறுகளை, ஊழலை மறைக்க நிறைய இலவச திட்டங்களை அறிவித்து ஓட்டு போடும்படி மக்களை ஆசை காட்டுகிறார்..இவரது இலவச திட்டங்களை தொடர்ந்து எதிர்கட்சிகளும் இலவச திட்டங்களை அறிவிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன..என்கிறது.
ஹெட்லைன்ஸ் டுடே ,தமிழக தேர்தல் அறிவிப்புக்கு முன்பு.வரை இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தது..ஆனால் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தவுடன் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது....விஜயகாந்த்,ஜெயலலிதாவின் பரபரப்பான பிரச்சாரம் அவர்கள் கூட்டணிக்கு அதிக மக்கள் ஆதரவை பெற்று தந்துவிட்டது....என சொல்லி இருக்கிறது.
’’இவனுக தலையில மொளகா அரைக்கலாம்னு பார்த்தா நம்ம தலையில அரைச்சிருவானுக போலிருக்கே’’
என்னை மாதிரியே கொழு கொழுன்னு கொழந்தை வேணும்னா தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்க...(ஆகா என்ன ஒரு சமூக நீதி..கொள்கை விளக்க பிரச்சாரம்..?)
கலைஞர் தான் மறுபடி முதல்வரு..தைரியமா பேசுன்னு உசுப்பி விட்டானுக...அந்தம்மா முதல்வர் ஆயிரும்னு ஒரு பயலும் சொல்லலை
தி.மு.க வினர் வடிவேலுவையும் குஷ்பூவையும் இந்த தேர்தலில் மலைபோல நம்பி இருக்கின்றனர்....தி.மு.க வின் ஐவர் என புகழப்பெற்ற நாவலர் நெடுஞ்செழியன்,மதியழகன்,சம்பத்..போன்ற தலைவர்களின் பேச்சாற்றலை நம்பியிருந்த கழகம் இன்று குஷ்பூவை நம்பி இருப்பதும்,அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து சிறை சென்று திரும்பிய பப்பூன் வடிவேலுவையும் நம்பி கலைஞர் களமிறங்கியிருக்கிறார்..என்பது காலம் தந்த கொடுவினை என தமிழக அரசியல் வார இதழ் குமுறி இருக்கிறது...
தாத்தா...இந்த வாட்டி என்ன முக்கினாலும்,அய்யோ கொல்றாங்களே னு சீன் போட்டாலும்,அறிவிக்காத எமெர்ஜென்ஸி...ஜனநாயகம் செத்ருச்சி னு ஒப்பாரி வெச்சாலும், ஒண்ணும் வேலைக்காவாது...ஆப்பு கன்ஃபார்ம்..மக்கள் முழிச்சிகிட்டாங்க....முக்கியமா தேர்தல் கமிஷன் முழிச்சிகிச்சு
|
No comments:
Post a Comment