ஜூம்லா என்பது இணைய தளங்கள் மற்றும் ஏனைய இணைய பயன் பாட்டு எப்லிகேசன்களை உருவாக்க்க் கூடியCMS எனும் ஒரு Content Management System ஆகும். (CMSஎன்றால் என்ன என கடந்த வார ஐடி வலம் பகுதியில்பார்த்தது நினைவில் இருக்கலாம்)
WordPress என்பது ப்லோக் தளங்களை உருவாக்குவதில் முன்னணியில் நிற்கும் அதே வேளை ஜூம்லா மூலம்இயக்க நிலையிலுள்ள (dynamic sites) இணைய தளங்களை உருவாக்குவதில் பிரபல்யம் பெற்று விளஙகுகிறது.
இது 2005 ஆம் ஆண்டு ஒரு ஒபன் சோர்ஸ் குழுமத்தினால்உருவாக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளாகும். ஜூம்லா எனும் வார்த்தைக்கு ஸ்வாஹிலி எனும் ஆபிரிக்க மொழியில் முழுமையான / அனைத்தும் உள்ளடக்கிய என்ற பொருளைத் தருகிறது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ஜூம்லா மூலம்sections, categories, content items, modules போன்ற பல்வேறு கூறுகளை ஒன்று சேர்த்து இணைய தளங்கள உருவாக்கப்படுகின்றன. இணைய தளவடிவமைப்பில் பயன் படுத்தப்படும் HTML, PHPபோன்ற ப்ரோக்ரமிங் மொழிகளில் தேர்ச்சி இல்லாமலேயே இலகுவாகவும் மிக சிறப்பாகவும் இணைய தளங்களை வடிவமைக்கலாம்.
இணைய தள வடிவாக்கத்தில் ஆர்வமுடையோர் இதனை இலவசமாக டவுன் லோட் செய்து பயன் படுத்தலாம். அத்தோடு நீட்சிகள் (extensions) மற்றும் படிமங்க்களையும்(templates) கூட ஜூம்லாவுக்கென உருவாக்கலாம்.
ஜூம்லவை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள ஒரு ஹோஸ்ட் கணினியிலேயே நிறுவ வேண்டும். அதனை நிறுவி விட்டால ஒரு இணைய தளத்தை எங்கிருந்தும் நிர்வகிக்கவோ புதுப்பிக்கவோ முடியும் அதே வேளை இணைய தளத்தைவடிவமைத்தல் பதிப்பித்தல் போன்ற அனைத்துகருமங்களும் பிரவுசர் மூலமாகவேமேற்கொள்ளப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
ஜூம்லா இயங்குவதில் தரவுத்தளம் முக்கிய பங்கு வகித்தாலும் தரவுத் தள நிர்வாகம் பற்றிய முழுமையான அறிவு உங்களிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் தரவுத்தளத்தின் பெயர், அத்னை அணுகுவதற்கான பயனர் பெயர் கடவுச் சொல் மற்றும் அதன் அமைவிடம்அமைவிடம் போன்ற விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்.
ஜூம்லா மென்பொருளை ஒரு வெப் சேர்வரிலேயே நிறுவ வேண்டும்.. எனினும் இணைய சேர்வர் இல்லாமலேயே உங்கள் கணினியை ஒரு வெப் சேர்வராக மாற்றி ஜூம்லாவை நிறுவிப் பரீட்சித்துப் பார்க்கலாம் அதனை லோக்கல் ஹோஸ்ட் (localhost) எனப்படும். இந்த லோக்கல் ஹோஸ்ட் வசதி விண்டோஸ் இயங்கு தளத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை Internet Information Services(IIS) எனப்படுகிறது.
..எனினும் ஜூம்லா இயங்க APACHE, மற்றும் PHP, MY SQLமுதலியன அவசியம் என்பதால் விண்டோஸில் வரும் IISபொருத்தமற்றது. எனவே இவை மூன்றும் இணைக்கப்பட்டWAMP / LAMP / MAMP / XAMPP போன்ற வேறு லோக்கல் ஹோஸ்ட் சேர்வர் மென்பொருள்கள் பயன் படுத்தப்படுகின்றன.
நான் இங்கு ஜூம்லாவை எவ்வாறு WAMP சேர்வரில் நிறுவுவது என விளக்கலாம் என நினைக்கிறேன்.ஜூம்லாவை உங்கள் கணினியில் இயங்க வைக்கும்Windows, Apache, MySQL, PHP என்பவற்றையே WAMP குறித்து நிற்கிறது. WAMP மென்பொருள் Windows இயங்கு தளத்திற்குஉருவாக்கப்பட்டதாகும்.
ளை www wampserver.com எனும் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். அதனை நிறுவும் போது c:wamp எனும் போல்டரைத் தெரிவு செய்வதோடு php mail parameters எனுமிஇடத்தில் SMTP ஆகlocalhost என்பதையும் தெரிவு செய்யுங்கள்.
அங்கு Next பட்டனில் க்லிக் செய்து முதலாம். இரண்டாம், மூன்றாம் நிலைகளைத் தாண்டி நான்காவது திரைக்கு வந்தது,ம் Basic Settings எனும் பகுதியில் ஹோஸ்ட் பெயராகLocalhost எனவும் பயனர் பெயராக: root எனவும் வழங்குங்கள். Password: அவசியமில்லை தரவுத்தளத்தின் பெயராக் : joomlatest என வழங்குங்கள்.
இங்கு ஜூம்லா இணைய சேர்வர் கணினியில் நிறுவப்படாததால் ஐந்தாவது திரையில் FTP Configurationதகவல்கள் அவசியமில்லை. ஆறாவதாகாத் தோன்றும் Main Configuration திரையில் தளத்திற்கான ஒரு பெயர், பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை வழங்குங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் நிறுவலில் பயன் படுத்தியinstallation போல்டரை நீக்கும் படி அறிவுறுத்தும். அந்தத் திரையை மூடாமலேயே வேம்ப் ஐக்கனில் க்ளிக் செய்துwww directory. என்பதைத் தெரிவு செய்து installation எனும் போல்டரை நீக்கி விடுங்கள். அல்லது அந்த போல்டரின் பெயரை மாற்றி விடுங்கள்.
இறுதியாகத் தோன்றும் திரையில் Site பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் தளத்தின் முதற் பக்கத்திற்குச் செல்லலாம். அதனை ஜூம்லாவில் Front End எனப்பகிறது.இறுதியாகத் தோன்றும் திரையில் Admin என்பதில் க்ளிக் செய்வதன் மூலம் இணைய தளத்தை நிர்வகிக்கும் Back Endஎனும் பக்கத்திற்குச் செல்லலாம் அல்லது பிரவுசரில்http://localhost/joomlatest /administrator/ என வழங்குவதன் மூலமும் அப்பக்கத்தை அடையலாம. அப்போது தோன்றும் திரையில் ஏற்கனவே வழங்கிய பயனர் பெயர், மற்றும் கடவுச் சொற்களை வழங்கி ஜூம்லாவில் பணியாற்ற ஆரம்பிக்கலாம்
|
No comments:
Post a Comment