போராட்டம் நடத்துனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கமுக்கமாக நடந்து வருகிறது. அதற்க்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்..
இங்கே பல மலையாளிகள் ஏன் தமிழர்களும் கள்ளத்தனமாக டேக்சி ஓட்டுகிறார்கள் [[செம வருமானம் பாஸ்]] பஹ்ரைனி டாக்சிகாரன் வாங்கும் பணத்தை விட இவர்கள் குறைவாக காசு வாங்குவதால் நாங்கள் இந்த டேக்சிகளில் பயணிப்பது உண்டு.
இவர்களை போலீசில் பிடித்து குடுத்தால் சன்மானம் உண்டு இருந்தாலும் நம்ம ஆளுங்க காட்டி கொடுப்பதில்லை.
அப்பிடி ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மலையாளி சேட்டன், ஒரு பிலிப்பைனி'யை ஏர்போர்ட்டில் விட சென்றபோது, இத கவனித்த பஹ்ரைனி டேக்சி'காரன் ஏர்போர்ட்டில் அந்த மலையாளியை பிடித்து ரத்தம் வர அடிக்க, போலீஸ் வந்து விசாரிக்க. பஹ்ரைனி [[போராட்ட பிரிவை சேர்ந்தவர்]] சொன்னான் இவன் கள்ள டேக்சி ஓட்டுகிறான் இதோ இவனை பிடித்து கொண்டு போ என்றிருக்கிறான். போலீஸ் மலையாளியிடம் விசாரிக்க, நான் கள்ள வண்டி ஒட்டவில்லை என் நண்பனைதான் விடவந்தேன் சரி அப்பிடியே நான் கள்ளவண்டி ஓட்டினாலும், இவன் என்னை போலீசில் ஒப்படைக்காமல் ரத்தம் வரும் படி எப்படி அடிக்கலாம் என கேட்க்க, போலீசுக்கு கோபம உச்சிக்கு ஏற பஹ்ரைனி வண்டிகாரனை துவைத்து [[போராட்ட கடுப்பு]] எடுத்திருக்கிறார்கள் [[நோட் பண்ணிக்கோங்க எமெர்ஜென்சி அமலில் இருக்கு]]
பின்பு மலையாளியிடம் அவன் அடித்தால் ஏன் நீ திருப்பி அடிக்க வேண்டியதுதானே'ன்னு சொல்லி சரி நீ போ என சொல்லி அனுப்பி விட்டு, பஹ்ரைனியை அள்ளி வேனில் வீசி அவன் காரை லாக் செய்து மேரூல் போலீசுக்கு தகவல் சொல்லி போனார்களாம். கள்ளவண்டி பார்ட்டிங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காங்க....ஸோ என்ன சொல்ல வர்றேன்னா இப்போ போராட்டகாரங்களுக்கு உள்ள மரியாதையும் போச்சு. வேலையும் போச்சு. இவர்கள் உங்களை [[இந்தியர்கள், பங்காளிகள், பாகிஸ்தானி]] தாக்கவோ, கேவலமாக பேசவோ செய்தால் திருப்பி தாக்குங்கள் என்ற பேச்சு ரகசியமாக சொல்லபடுகிறது.
சரி அடுத்து ஒரு செய்தி நம்ம 'உணவு உலகம்' சங்கரலிங்கம் ஆபீசருகிட்டே இது போல கேசுகள் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.
நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா...
|
No comments:
Post a Comment