Showing posts with label லேப்டாப். Show all posts
Showing posts with label லேப்டாப். Show all posts

Monday, July 4, 2011

குகிளின் புதிய லேப்டாப்

  குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.
இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.

Monday, June 27, 2011

லேப்டாப் அம்சங்களை காணலாம்

தமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டரை இலவசமாகத் தர இருக்கும் திட்டம் இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரிடமும் நாமும் ஒரு லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. பொறியியல் பட்ட வகுப்புகள் மற்றும் எம்.பி.ஏ. பிரிவுகளில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்ட நிலையில், அறிவியல் மற்றும் கலைப் பாடங்கள் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், லேப் டாப் கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்த முனைகின்றனர். 

லேப்டாப் ஒன்றை வாங்குகையில் என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.

தேவையானவை:

1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப்டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்தவும், தகவல்களைத் தேடவும் இதனைப் பயன்படுத்தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
2. குறைந்த எடை: ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நூல்களும் மற்ற தேவைகளும் கொண்டு செல்கையில், ஒவ்வொரு மாணவரும் கணிசமான எடையைத் தூக்கிச் செல்ல வேண்டும். எனவே மிகக் குறைந்த எடையுள்ள லேப் டாப் கம்ப்யூட்டரையே நாம் தேர்ந்தெடுப்பது, அதனை எப்போதும் எடுத்துச் சென்று பயன்படுத்த வழி வகுக்கும்.
3. கீ போர்டு வசதி: கற்பதற்கு ஒரு கருவியாய் லேப் டாப் மாணவர்களுக்குப் பயன்பட இருப்பதால், அதிகமாக இதில் டைப் செய்திடும் வேலை இருக்கும். மேலும் ஆன்லைன் சேட்டிங், பேஸ்புக், ட்விட்டர் என மாணவர்கள் எந்நேரமும் செல்லும் தளங்கள் இருக்கும். எனவே டைப் செய்திடும் வேலையை எளிதாக்கும் கீ போர்டு இருப்பது நல்லது. 
4. அதிக திறன் கொண்ட வெப்கேமரா: இப்போது வரும் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களும் வெப் கேமரா இணைக்கப்பட்டே கிடைக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒரே வகையான திறனுடன் இருப்பதில்லை. ஆன்லைன் சேட்டிங் அல்லது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் என எதில் ஈடுபட்டாலும், குறைந்த ஒளியிலும் சிறப்பாக உங்களைக் காட்டும் திறனுடன் கூடிய வெப் கேமரா உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
5. வாரண்டி: லேப்டாப் பார்ப்பதற்கு மென்மையானதாக இருந்தாலும், மாணவர்கள் அதனைச் சற்றுக் கடுமையாகவே கையாள்வார்கள். பைகளில் வைத்து எடுத்துச் செல்வதும், பைகளில் லேப்டாப் உள்ளது என்று அறியாமல், பைகளைக் கையாள்வதும் மாணவர்களுக்கே உரித்தான செயல்பாடு. எனவே சற்று கடினமான பாதுகாப்பு சுற்றுப் புறங்களைக் கொண்ட லேப்டாப்களை வாங்குவது நல்லது. எதனையும் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இருக்கும். எனவே அதிக காலம் வாரண்டி தரும் திட்டத்துடன் வரும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு லாபமே.
6. இயக்கப் பாதுகாப்பு: கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை அதிகம் திருடப்படுவது லேப்டாப் கம்ப்யூட்டர்களே. கவனக் குறை வால் தொலைக்கப்படுவதும் அவையே. எனவே தொலைந்து போனாலும், திருடப்பட்டாலும் அவற்றைத் திரும்பப் பெற வழி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்ட லேப்டாப்கள் இந்த வகையில் நமக்கு கை கொடுக்கும். அதே போல நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதில் பதியப்பட்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும். 

தேவையற்றவை:
1. குவாட் கோர் ப்ராசசர்: குவாட் கோர் ப்ராசசர் இயக்கம் கொண்ட லேப்டாப் நமக்கு நல்லதுதான். ஆனால் மாணவர் நிலையில் கம்ப்யூட்டர் இயக்குபவர் களுக்கு டூயல் கோர் சி.பி.யு. கொண்ட கம்ப்யூட்டரே போதும். இவை பயன்படுத்தும் மின்சக்தி குறைவு; விலையும் குறைவு. அதே நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் கை கொடுக்கும். 
2. அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ்: நல்லதொரு கிராபிக்ஸ் சிப் எந்த கம்ப்யூட்டரிலும் ஒரு நல்ல நண்பன் தான். வீடியோ காட்சிகள் தெளிவாகக் கிடைத்திட, வேகமாக இணைய உலா செல்ல, முப்பரிமாண விளையாட்டுக் களை இயக்கி விளையாட, என இதன் பயன்களைப் பட்டியலிடலாம். ஆனால் அதே நேரத்தில் சில பாதகமான அம்சங்களும் இதில் உள்ளன. இவை இயங்கும் போது அதிக வெப்பம் உருவாகும்; பேட்டரி சக்தி விரைவில் குறையும்; சிஸ்டத்தின் எடையை அதிகரிக்கும்; பெரிதாக்கும். நிச்சயம் விலையும் அதிகரிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு கிராபிக்ஸ் கார்டைப் பெறுவது நல்லது. 
3. சாலிட் ஸ்டேட் ட்ரைவ்: வழக்கமான ஹார்ட் ட்ரைவ்களைக் காட்டிலும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், சற்று அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையே. நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியவை. ஆனால் இதனால் இன்றையச் சூழலில் விலை அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பல வகைகளில் சிறந்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது சற்று அதிகம் தான். 
4. டச் ஸ்கிரீன்: இன்றைக்கு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டாலும், மொபைல் போனை எடுத்துக் கொண்டா லும், தொடு திரை இயக்கத்தினயே அனைவரும் நாடுகின்றனர். ஆனால் லேப்டாப்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இன்னும் டச் ஸ்கீரின் இயக்கத்திற்குத் தயாராகவில்லை. எனவே இதனை இன்னும் சில காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.

Monday, June 6, 2011

லேப்டாப் பேட்டரி doubler software





லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின்

திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு



எளிதானது




Sunday, May 1, 2011

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி


லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1
னடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.

இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக

Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, April 23, 2011

லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது.


நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.


டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும்உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக்கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல்லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.

2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.





இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம்.

பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.

5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

Saturday, April 16, 2011

லேப்டாப் போல மொபைலிலும் பாட்டரி மீட்டர் (BATTERY METER) வேண்டுமா?

     உங்கள் மொபைல் பேட்டரி பற்றிய தகவல்கள் அறிய ஒரு மென்பொருள் உள்ளது. 

    இதன் மூலம் லாப்டோப்பின் கீழே காணப்படுவது போல மொபைல் மேட்டரி எத்தனை நாள் தாங்கும், இனி எப்போது ரீசார்ஜ் செய்யவேண்டும் போன்ற அனைத்து தகவல்களும் அதில் காணப்படும்.

  இந்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இதை முயற்சித்து பார்க்கலாம்.

  தரவிறக்க சுட்டி 

Tuesday, April 12, 2011

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?


நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப் கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.


டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.

2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம். இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது.

மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம். பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.

5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்

Friday, April 8, 2011

நீங்கள் மடிக்கணினி வைத்திருப்பவரா? மடிக்கணினி துணை சாதனங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!



பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் தற்போது மடிக்கணினிகள் (லேப் டாப் கம்ப்யூட்டர்கள்) விற்பனை உயர்ந்து வருகிறது. பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் மடிக்கணினி ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்பதனை உணரத் தொடங்கி உள்ளனர்.
பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகங்களே மாணவர்களுக்கு மடிக்கணினி நிறுவனங்களுடன் பேசி சலுகை விலையில் இவற்றை வாங்கித் தரும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.
மடிக்கணினி  மட்டும் வாங்கிவிட்டால் போதாது. இது ஒன்றும் டெஸ்க் டாப் கணினி அல்ல. பல இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் ஒரு சாதனம். செல்லும் இடங்களில் உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்திற்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். அதனைப் பத்திரமாகப் பாதுகாக்க வேறு சில கருவிகளும் தேவைப்படலாம். எனவே லேப் டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

1. சர்ஜ் புரடக்டர் (Surge Protector): பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் நமக்குச் சரியான பாதுகாப்பான வழிகளில் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. கிடைக்கும் வோல்டேஜில் திடீரென அழுத்தம் அதிகமானால் அது லேப்டாப்பின் நுண்ணிய பாகங்களை வறுத்தெடுப்பதோடு உங்களின் உழைப்பில் உருவான டேட்டாவையும் காலி செய்துவிடும். எனவே ஒரு நல்ல சர்ஜ் புரடக்டரை வாங்கி வைத்துக் கொண்டு அதனைப் பயன்படுத்துவது நல்லது.
இங்கு நல்ல சர்ஜ் புரடக்டர் என்று சொல்லக் காரணம் இது மின்சக்தியை சரி செய்திடும் சாதனம். ரூ.350க்கு சர்ஜ் புரடக்டர் கிடைக்கின்றன.ஆனால் அவை சரியாக இயங்குவதில்லை. ரூ.750 என்ற அளவில் நல்ல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு தரமான சர்ஜ் புரடக்டர்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.
நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்பவராக இருந்தால் அங்கு என்ன அளவில் மின்சக்தி விநியோகம் செய்யப்படுகிறது என்பதனை அந்த இணைப்புக்கும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள சர்ஜ் புரடக்டரை வாங்குவது நல்லது. மடிக்கணினி மட்டுமின்றி வேறு சில டிஜிட்டல் சாதனங்களையும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்வதால் அதிக அவுட்லெட்கள் உள்ள சர்ஜ் புரடக்டரை வாங்கவும்.
2. செக்யூரிட்டி கேபிள் (Security Cable): செக்யூரிட்டி கேபிள் என்பது நீளமான ஒரு கனமான ஸ்டீல் சங்கிலி. இதன் ஒரு நுனியில் சரியான பூட்டு, பெரும்பாலும் எண்கள் கொண்டு பூட்டும் பூட்டு இருக்கும். அதிக நீளம் இருக்கும் கேபிளைத் தேர்ந்தெடுத்து அதன் பூட்டினையும் சரி பார்த்து வாங்கவும். இதனைப் பயன்படுத்தி நாம் லேப்டாப்பினை எதனுடனாவது இணைத்துப் பூட்டி வைக்கலாம்.
3. யுனிவர்சல் அடாப்டர் (Universal Adapter): வெளியூர்களில் மின்சாரம் பெறக்கூடிய ப்ளக் சாக்கெட்டுகள் வேறு விதமாக இருக்கலாம். இதனால் அருகிலிருந்தும் தொடப் பயந்தேனே என்ற கலைவாணர் ரீதியில் பாட வேண்டியதுதான்.
லேப்டாப், மின்சாரம், ப்ளக் இருந்தும் பொருந்தாத சாக்கெட் இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையைத் தீர்க்க கடைகளில் யுனிவர்சல் அடாப்டர் என்று ஒரு சாதனம் விற்பனை செய்யப்படுகிறது. இது எந்த வகை சாக்கெட்டிலும் இணையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் நான்கு வகை ஸ்லைடிங் செட் பின்களும் பலவகை சாக்கெட்டுகளும் இருக்கும். உங்களுக்குத் தேவையான ப்ளக் மற்றும் சாக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம்.
4. கூலிங் பேட் (Cooling Pad): லேப் டாப் கம்ப்யூட்டரை ஒரு சிலர் மடிக் கணினி என்று கூறுவார்கள். மடித்து வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் மடிமீது வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என இரு வகைகளில் பொருள் கொள்ளலாம்.
எது எப்படி இருந்தாலும் மடிமீது வெகு நேரம் வைத்துப் பயன்படுத்தினால் மடிக்கணினி உள்ளே உருவாகும் வெப்பம் கால் மேல் பகுதியினை சூடு பட வைக்கும். இதனைத் தவிர்க்கப் பல அளவுகளில் கூலிங் பேட்கள் கிடைக்கின்றன. இவை வெப்பத்தினை வெளியேற்றுகின்றன. நம் வீடுகளில் காற்றோட்டமான சூழ்நிலையிலும் கூட இதனைப் பயன்படுத்தலாம்.
5. டிவிடி ரைட்டர் (DVD Writer): பல மடிக்கணினி டிவிடி ரைட்டர் இல்லாமலும் வருகின்றன. ஆனால் நமக்கோ எங்கு சென்றாலும் டிவிடி ரைட்டர் தேவையாய் உள்ளது.இத்தகைய மடிக்கணினி வைத்திருப்பவர்கள் தனியே யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தக் கூடிய டிவிடி ரைட்டர் ஒன்றை வாங்கித் தேவைப்படும் போது இணைத்துப் பயன்படுத்தலாம். மிகச் சிறிய ஸ்லிம்மான பல போர்ட்டபிள் டிவிடி ரைட்டர்கள் மார்க்கட்டில் கிடைக்கின்றன. கிடைத்தால் புளு ரே டிஸ்க்குகளையும் பிளே செய்திடும் ரைட்டரை வாங்கவும்.
6. யு.எஸ்.பி. ஸ்பீக்கர்கள் (USB Speaker): லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பீக்கர்களில் எதனையும் தெளிவாகக் கேட்டு புரிந்து கொள்ள முடியாது. எனவே இவற்றில் இணைத்துப் பயன்படுத்த பல நிலைகளில்இபல அளவுகளில் யு.எஸ்.பி. ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மொபைல் போனுக்குக் கூட இத்தகைய ஸ்பீக்கர்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
7. போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ் (Portable Hard Drive): லேப்டாப் கம்ப்யூட்டர்களின் ஹார்ட் டிஸ்க் பெர்சனல் கம்ப்யூட்டர்களோடு ஒப்பிடுகையில் சற்று குறைவான கொள்ளளவு கொண்டவையாகத்தான் இருக்கும். பல லேப்டாப்பில் 80 ஜிபிக்கும் குறைவாக ஹார்ட் டிஸ்க் இருப்பதனைப் பார்க்கலாம். இதற்கு ஒரே வழி எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்துவதுதான். பவர் சப்ளை இல்லாத ஹார்ட் டிஸ்க்குகளை வாங்கிப் பயன்படுத்துவது இந்த வகையில் நல்லது.
8. வயர்லெஸ் மவுஸ் (Wireless Mouse): லேப்டாப்பில் உள்ள ட்ரேக் பேட் நம் அவசரத்திற்கு நேவிகேட் செய்வதற்கு வசதிப்படாது. எனவே கூடுதலாக மவுஸ் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இந்த மவுஸும் வயர்லெஸ் மவுஸ் ஆக இருந்தால் இன்னும் நல்லது. இதில் மவுஸ், உள்ளே இருக்கும் பேட்டரியில் தான் இயங்கும். எனவே அந்த வகை பேட்டரிகள் சிலவற்றை உபரியாக வைத்துக் கொள்வதும் நல்லது.
9. யு.எஸ்.பி. ஹப் (USB Hub): எப்படி நமக்கு எவ்வளவு அளவில் ராம் மெமரி இருந்தாலும் பற்றவில்லையோ அதே போல யு.எஸ்.பி. போர்ட் எத்தனை இருந்தாலும் நமக்குப் போதுமானதாக இருக்காது. மேலும் சில லேப் டாப் கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.போர்ட்களை அடுத்தடுத்து அமைத்திருப்பார்கள்.
இதில் இன்டர்நெட் இணைப்பு தரும் சிறிய சாதனம் போன்றவற்றை ஒன்றில் பயன்படுத்தினால் இன்னொன்றில் எதனையும் இணைக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவ ஒரு இணைப்பில் எடுத்து ஒன்றுக்கு மேற் பட்ட யு.எஸ்.பி. இணைப்பினைத் தரும் யு.எஸ்.பி. ஹப் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
10.லேப்டாப் கீ போர்டு விளக்கு (Keyboard Light): சிலர் ட்ரெயின்களில் செல்கையில் இரவில் தூக்கம் வராத போது அல்லது அவசரமாக சில மெயில்களை அனுப்ப எண்ணுகையில் லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இவர்கள் பயன்படுத்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் விளக்கினை ஆன் செய்வது மற்றவர்களின் தூக்கத்தினைக் கெடுக்கும். இவர்களுக்காகவே யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தால் எரியும் சிறு விளக்குகள் மார்க்கட்டில் கிடைக்கின்றன. இதற்குத் தனியே பேட்டரி தேவை இல்லை. இவை லேப்டாப்பின் பேட்டரியிலிருந்தே மின்சாரம் பெற்று மிதமான ஒளியைக் கொடுக்கும். கீ போர்டைக் காண இது போதும். பெரும்பாலும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட குழாயில் தான் இவை இணைக் கப்பட்டிருக்கும். இதனால் நாம் மற்றவர் மீது ஒளி விழாமல் வைத்துப் பயன்படுத்தலாம்.
11. மல்ட்டிபிள் ஹெட் போன் ஜாக் : நீங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ பயன்படுத்துபவராக இருந்தால் அதிக வால்யூம் வைத்துத் தான் கேட்க வேண் டியதிருக்கும். ஹெட் செட் இணைப்பதாக இருந்தால் ஒருவர் மட்டுமே கேட்க முடியும். எனவே நண்பர்களுடன், குடும்ப உறுப்பினர்களுடன் அனைவரும் ரசிக்கத் திட்ட மிட்டால் பல ஹெட்செட் ஜாக்குகள் உள்ள மல்ட்டிபிள் ஹெட் போன் ஜாக் ஒன்றை வாங்கி, முடிந்தால் நீளமான இணைப்பு வயருடன், பயன்படுத் துங்கள். இதனால் ஒரே நேரத்தில் பலரும் ரசிக்கலாம்; மற்றவர்களுக்கும் தொந்தரவு இருக்காது.

உயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணினி



ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இன்றைய கணினி யுகத்தில்  அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களை விட ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. பொதுவாக ஆண்கள் உட்காரும்பொழுது கால்களை சற்று அகலமாக விரித்து உட்காருவது வழக்கம். இது அவர்களின் விதைப் பையையும், (Scrotum and Testicles) விதைக் காய்களையும் தகுந்த வெப்பத்தில் இருக்க உதவுகிறது. மடிக் கணினி உபயோகப்படுத்தும் போது கால்களை சற்று நெருக்கமாக வைத்து கணினியைத் தாங்கி பிடிப்பதால் கால்களுக்கிடையில் வெப்பம் அதிகமாக செல்கிறது. இது விதைப்பையின் வெப்பத்தை வழக்கத்தைவிட சுமார் 2.7 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக்குகிறது. இதனால் குழந்தை பெறும் தகுதியுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் (Sperm Count) எண்ணிக்கை 10 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

நீண்ட நாட்கள் மடிக் கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு தொடையின் முன் நடுப்பகுதியில் தோலிலும் அதன் அடியிலும் மாற்றம் ஏற்படுகிறது. மடிக் கணினி உபயோகிக்கும் போது இதன் அடிப்பாகத்தில் பேட்டரியினால் அல்லது மின்சாரத்தினால்  இளஞ்சூடு உண்டாகிறது. இதனால் தோலுக்கு அடியில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, தோல் சில நாட்களில் சிவந்தும், சிறு சிறு சிவந்த கோடுகளாகவும் நிற மாற்றத்துடன் காணப்படுகிறது. இது வெளி நாடுகளில் மடிக் கணினி உபயோகப்படுத்தும், இளம் பெண்களுக்கு, குறிப்பாக  நாகரிக அரை டிராயர் (Half Trouser) அணிந்து வெளியே செல்பவர்களுக்கு தோல் மாற்றம் மன வருத்தத்தைத் தருகிறது.
இந்த நிற மாற்றத்துடன் கூடிய, சிவந்த தோற்றத்துடனான பாதிப்புக்கு Erythema Ab Igne அல்லது Toasted Skin Syndrome என்று பெயர். இது நீண்ட நாட்கள் மடிக் கணினி உபயோகத்தினால் விட்டு விட்டு ஏற்பட்ட இளஞ்சூட்டினால் வரலாம். வேறு சிலருக்கு வலி நிவாரணத்திற்கு உடலின் மற்ற பாகங்களில் நீண்ட நாட்கள் தரப்படும் வெந்நீர் ஒத்தடப் பைகளின் சூட்டினாலும் அந்தந்த பகுதிகளில் இத்தகைய தோல் மாற்றங்கள் வரலாம். இந்த பாதிப்பை பாதிக்கப்பட்டவரிடம் மருத்துவரின் விசாரிப்பினாலும், பரிட்சித்துப் பார்ப்பதினாலும் கண்டறியலாம்.
எனவே, இளம் வயது பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலை மற்றும் தொழில் செய்யும் அனைத்து ஆண்களும் மடியில் கணினி வைத்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இளம் வயது பையன்களும், இளைஞர்களும், பெண்களும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மடிக் கணினியை தாழ்வான மேசைகளில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
ஆண்கள் மடிக் கணினியின் தவறான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உயிரணுக்கள் குறைவுப் பிரச்னையையும், ஆண், பெண் இருபாலார்க்கும் முன் தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய சிகப்பு மற்றும் தோலில் மாற்றம் ஆகியவற்றையும் தவிர்க்க மடிக் கணினியை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவோம்.

Tuesday, December 14, 2010

கூகிள் நிறுவனத்தின் இணைய மடிக்கணினி வெளியிடப்பட்டுள்ளது

கூகிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான இணையக் மடிக்கணினியை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. Cr-48 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ஏனைய கணினிகளைப் போலல்லாது, அனைத்து மென்பொருட்களையும் இணைகத்தள உலாவியினூடாக செயற்படுத்துகின்றது. எனவே, இந்த மடிக்கணினிக்கு எற்தவொரு மென்பொருளையும் பாவனையாளர்கள் தனித்தனியாக நிறுவ வேண்டிய தேவை இல்லை.
chrome_x220தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினியை, கூகிள் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யாது, தன்னார்வ தொண்டர்களுக்கு பரிசோதனைக்காக வழங்கியுள்ளது. இந்தவகை மடிக்கணினிகள் 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது
. இக்கணினியில், கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Chrome இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இவ் இயங்குதளம் அதனுடைய மென்பொருட்களை நேரடியாக இணையத்திலிருந்து இயக்கவல்லது. கூகிள் நிறுவனம் அண்மைக்காலமாக Cloud Computing எனப்படும் இணையக் கணினி கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் இந்த மடிக்கணினியின் அறிமுகம், இத்துறையில் அந்நிறுவகத்தின் முதற்படி என்று கருதப்படுகின்றது.
தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து இயங்குதளங்களிலும் மென்பொருளானது நிறுவப்படும்பொழுது, இயங்குதளம் அந்த பென்பொருளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கின்றது. ஆனால் கூகிளின் Chrome இயங்குதளத்தில் இவ்வாறு மென்பொருளை நிறுவுதலோ அல்லது அதனை உறுதிப்படுத்துவதோ நடைபெறாது. இதிலே இணையத்தைத் தொடர்பு கொள்வதற்கான மென்பொருள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். ஏனைய அனைத்து மென்பொருட்களும் இணையத்திலிருந்து நேரடியாக இயக்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தின் நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை மேம்மடுத்தி அதற்கான மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக கூகிள் நிறுவனம் ஒரு இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது. இந்தத் தளத்தினூடு அதிக வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.