Tuesday, December 14, 2010

கூகிள் நிறுவனத்தின் இணைய மடிக்கணினி வெளியிடப்பட்டுள்ளது

கூகிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான இணையக் மடிக்கணினியை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. Cr-48 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ஏனைய கணினிகளைப் போலல்லாது, அனைத்து மென்பொருட்களையும் இணைகத்தள உலாவியினூடாக செயற்படுத்துகின்றது. எனவே, இந்த மடிக்கணினிக்கு எற்தவொரு மென்பொருளையும் பாவனையாளர்கள் தனித்தனியாக நிறுவ வேண்டிய தேவை இல்லை.
chrome_x220தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினியை, கூகிள் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யாது, தன்னார்வ தொண்டர்களுக்கு பரிசோதனைக்காக வழங்கியுள்ளது. இந்தவகை மடிக்கணினிகள் 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது
. இக்கணினியில், கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Chrome இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இவ் இயங்குதளம் அதனுடைய மென்பொருட்களை நேரடியாக இணையத்திலிருந்து இயக்கவல்லது. கூகிள் நிறுவனம் அண்மைக்காலமாக Cloud Computing எனப்படும் இணையக் கணினி கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் இந்த மடிக்கணினியின் அறிமுகம், இத்துறையில் அந்நிறுவகத்தின் முதற்படி என்று கருதப்படுகின்றது.
தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து இயங்குதளங்களிலும் மென்பொருளானது நிறுவப்படும்பொழுது, இயங்குதளம் அந்த பென்பொருளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கின்றது. ஆனால் கூகிளின் Chrome இயங்குதளத்தில் இவ்வாறு மென்பொருளை நிறுவுதலோ அல்லது அதனை உறுதிப்படுத்துவதோ நடைபெறாது. இதிலே இணையத்தைத் தொடர்பு கொள்வதற்கான மென்பொருள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். ஏனைய அனைத்து மென்பொருட்களும் இணையத்திலிருந்து நேரடியாக இயக்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தின் நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை மேம்மடுத்தி அதற்கான மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக கூகிள் நிறுவனம் ஒரு இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது. இந்தத் தளத்தினூடு அதிக வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment